உச்சகட்ட போதை.. சாலையில் அராஜகம்... பரபரப்பை ஏற்படுத்திய கன்னட நடிகர்.. மக்கள் தர்ம அடி
கன்னட நடிகர் ஹுச்சா வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
பெங்களூரு: ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஒரு காரின் கண்ணாடியை இழுத்தும், உடைத்தும் போதையில் அட்டகாசம் செய்துள்ளார் சர்ச்சை நடிகர் ஹுச்சா வெங்கட்! இதனால் போலீசார் இவரை அமுக்கி கொண்டு போய் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
ஹுச்சா வெங்கட்.. கன்னடத்தில் மிகப்பெரிய நடிகர்... டைரக்டர்.. புரொடியூசர்.. பாட்டு எழுதுவார்.. பின்னர் அவரே பாடவும் செய்வார்.. அப்படி ஒரு ஆல் இன் ஆல் ரவுண்டர் இவர். எவ்வளவுக்கு எவ்வளவு இவர் ஃபேமஸ் ஆகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு டேமேஜும் ஆகிவிடுவார். அதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே!
ஒரு நடிகையை காதலித்தார்.. ஆனால் அவர் இவரை காதலிக்கவில்லை.. அதனால் தற்கொலை செய்ய போவதாக சொல்லி கர்நாடகத்தையே கிடுகிடுத்த வைத்தவர்.

கார்
இப்போதும் மறுபடியும் ஒரு பஞ்சாயத்து வந்துள்ளது. இவர் நேற்று குடகுக்கு சென்றார். செம போதையில் போயிருக்கிறார்.. அங்கு ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க போனவர், சும்மா இருக்காமல், ரோட்டோரம் நின்றிருந்த கார் அருகில் சென்றார்.

கண்ணாடி
அந்த கார் மீது ஒத்தை காலை வைத்து போஸ் கொடுக்கிறார். அந்த கார் கதவை படக்கென திறக்கிறார்... படக்கென மூடுகிறார்.. பிறகு கீழே கிடந்த கல்லை எடுத்து கார் மீது எறிகிறார். இதில் கார் கண்ணாடி சல்லி சல்லியாக உடைந்துவிட்டது. இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் எல்லாரும் கூடிவிட்டார்கள்.
|
அப்படிதான் உடைப்பேன்
மேற்கொண்டு காருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, இதை தடுத்து நிறுத்த முயன்றவர்களிடம் வம்படியாக சண்டைக்கு போய், வாக்குவாதம் செய்தார். அதற்குள் கார் ஓனர் வந்துவிட்டார். "எதுக்காக என் கார் கண்ணாடியை உடைத்தாய்" என்று கேட்கவும், "நான் அப்படித்தான் உடைப்பேன்" என்று பதில் சொல்லி உள்ளார்.
|
கைது
இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்களில் சிலர், திடீரென வெங்கட்டை தாக்க ஆரம்பித்தனர். இதையடுத்து விஷயம் போலீசுக்கு போனது. விரைந்து வந்த அவர்கள், வெங்கட்டை ஸ்டேஷனுக்கு கூட்டி சென்று விசாரித்து வருகிறார்கள். ஆனால் வெங்கட்டை மக்கள் நையப்புடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications