RCB கோலிக்கு பெங்களூரில் வந்த திடீர் சிக்கல்.. ஒரு சின்ன தப்பால்.. கம்பெனி மீது வழக்குப்பதிவு!
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கோலியின் ஒன்8 கம்யூன் பார் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளது. பெங்களூரில் உள்ள இளைஞர்கள் பலரும் விரும்பி செல்லும் பப்பாக உள்ள ஒன்8 கம்யூன் மீது அங்குள்ள போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரான கோலி கிரிக்கெட்டை தாண்டியும் பல்வேறு பிஸ்னஸ்களை நடத்தி வருகிறார். அதில் ஒன்று தான் ஒன்8 கம்யூன் பார் மற்றும் உணவகம். இது பெங்களூர் உட்பட நாட்டின் சில முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கோலிக்கு சொந்தமானது என்பதாலேயே பலரும் இங்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பெங்களூர் கோலி பப்
இதற்கிடையே பெங்களூரில் உள்ள விராட் கோலிக்குச் சொந்தமான பப் மற்றும் உணவகமான ஒன்8 கம்யூன் இப்போது சட்ட ரீதியான சிக்கலைச் சந்தித்துள்ளது. அதாவது பொதுவாக பப் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிக்கத் தனியாக ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால், கோலியின் ஒன்8 கம்யூனில் புகை பிடிக்கும் ஏரியா எனத் தனியாக இல்லை எனச் சொல்லப்படுகிறது.
இதனால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டத்தின் (COTPA) விதிகளை மீறியதற்காக கப்பன் பார்க் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாருமே இது தொடர்பாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும் இந்த விவகாரத்தில் ஒன்8 பப் மீது தானாக முன்வந்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு
உணவகத்திற்குள் புகை பிடிக்கப் பிரத்தியேக இடம் இல்லாததால் COTPAஇன் பிரிவுகள் 4 மற்றும் 21இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. COTPA விதிகளின் கீழ் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தனியாகப் புகை பிடிக்கும் இடம் என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். கோலியின் பப் அப்படி தனியாக எந்தவொரு இடமும் இல்லை என்பதே புகாராகும்.
கடந்த சனிக்கிழமை பெங்களூர் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.. பெங்களூர் போலீசார் புகைபிடிக்கும் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அவ்வப்போது சோதனை நடத்துவார்கள். அப்படி வழக்கமாக நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு
புகைபிடிக்கும் பழக்கத்தைத் தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்குச் சமீபத்தில் தான் ஹூக்கா பார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. மேலும், புகையிலை பொருட்களை வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயதும் 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடக அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் திருத்தச் சட்டம் சமீபத்தில் தான் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற நிலையில், இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.
இது முதல்முறை இல்லை
அதேநேரம் கோலியின் ஒன்8 கம்யூன் இதுபோல சட்டச் சிக்கலில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பரில், தீ பாதுகாப்பு மீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் அனுமதிச் சான்றிதழ் இல்லை என்பதால் ஒன்8 கம்யூன் மீது நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஒன்8 கம்யூன் சிக்கலில் மாட்டியிருக்கிறது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications