Thug life: "நாம் எதிரிகள் இல்லை.. நண்பர்கள்.. அரசியலாக்க வேண்டாம்" கமல்ஹாசனுக்கு ஆதரவாக DK சிவகுமார்
பெங்களூர்: கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்துக்கு கர்நாடக ஃபிலிம் சேம்பர் தடை விதித்துள்ள நிலையில், "கமல் பேச்சை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்ற வேண்டாம். நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள்." என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடந்த மே 24 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "உயிரே உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று பேசினார்.
தக் லைஃப் படத்துக்கு எதிர்ப்பு
கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறி கன்னட மக்களை கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம் என கன்னட அமைப்புகள் அறிவித்தன. 'தக் லைஃப்' படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் ஒட்டப்பட்ட இடங்களில் அவற்றை சில கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.
கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கமலுக்கு அது தெரியவில்லை" என்று கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, "கமல்ஹாசன் தனது நாகரிகமற்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தக் லைஃப் தடை
மேலும் கர்நாடக பிலிம் சேம்பர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது. எனினும் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க முடியாது என்ற முடிவில் திடமாக உள்ளார். "நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், தவறு செய்யவில்லை என்றால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுவே எனது லைஃப் ஸ்டைல்" எனக் கூறி உள்ளார்.
இதன் காரணமாக, கர்நாடகாவில் 'தக் லைஃப்' படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் தொடர்கிறது. தற்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தியேட்டர்களில் முன்பதிவு திறக்கப்படாததால், கர்நாடக மாநில கமல் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். கர்நாடகா முழுவதும் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியிடப்படாவிட்டால் அது படத்தின் வசூலிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
டிகே சிவக்குமார் பேட்டி
இந்த நிலையில், கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
டிகே சிவக்குமார் பேசுகையில், "நாம் அண்டை மாநிலத்தவர்கள். நாம் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். நாம் எதிரிகள் கிடையாது. அனைவரும் நண்பர்கள். இந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்கு தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல்ஹாசனை விமர்சித்திருந்த நிலையில், துணை முதல்வர் டிகே சிவக்குமார், கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து சொல்லாதது கவனம் பெற்றுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications