சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் விவகாரம்.. ஆய்வறிக்கையில் கூறப்பட்டது என்ன? முழு விவரம் இதோ..
பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கையில் என்னென்ன உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாக அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா கண்டறிந்து புகார் கூறினார்.
மேலும் இந்த சிறப்பு வசதிகள் செய்வதற்கு கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ 2 கோடி பணம் கொடுக்கப்பட்டதாகவும் ரூபா புகார் கூறினார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

ஆய்வறிக்கை
அந்த குழுவானது சிறையில் உள்ள சசிகலா, சக கைதிகள், சிறைத் துறை அதிகாரிகள், ரூபா, சத்யநாராயணா என விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் சிறைக்கு சென்று சசிகலா அறையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என ஆய்வறிக்கையை அந்த குழு வெளியிட்டது.

5 அறைகள்
அந்த அறிக்கையில் சிறையில் விதிகளை மீறி சசிகலாவுக்கும் இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டதால் சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பூனைகள்
சசிகலாவின் அறையில் பூனைகள் நுழையாமல் இருப்பதற்காக திரைச்சீலைகள் போடப்பட்டதாக சிறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

வேறுபாடு
சசிகலா, இளவரசி கைப்பையுடன் வெளியே சென்று வந்த சிசிடிவி காட்சி மீதான விசாரணையில் சசிகலா பார்வையாளர்களை சந்தித்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும் சிசிடிவியில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு உள்ளது.

கண்டறியப்பட்டது
நீதிமன்றம் உத்தரவிட்டதாக எண்ணியே சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியதாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவில் கண்டறியப்பட்டது மட்டுமின்றி சிறைத் துறை உயர் அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications