பெங்களூரில் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் என்ன நடந்தது? இந்த வீடியோ பாருங்க.. கலங்கும் மக்கள்
பெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பை வென்றதை தொடர்ந்து பெங்களூரு அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேற்று முதலே ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது. அப்போது யாரும் எதிர்பாராத நிகழ்வு நடந்தது. மொத்த ரசிகர்களையும் ஆடிப்போக வைத்த அந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூர் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஆர்சிபி ரசிகர்களின் 18 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்து வைத்தது. ஒவ்வொரு முறையும் விராட் கோலி எப்படியும் இந்த முறை கப் வாங்கிவிடுவோம் என்று எண்ணி எண்ணி போராடி, 17 முறை முடியவில்லை.. 18 வது முயற்சியில் வென்றுள்ளார். முன்னதாக பெங்களூர் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்த போதே ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ஆர்சிபி அணி பஞ்சாப் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதியது. இந்தபோட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியை நேற்று சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைனில் கண்டுகளித்துள்ளனர்.இந்த போட்டியினை பெங்களூர் ரசிகர்கள் காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. பெங்களூருவில் ஜே.பி.ரோடு, பி.ஜி.எஸ். கோவிந்தராஜநகர் உள்பட பல இடங்களில் எல்.இ.டி. திரை கட்டி ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது.
பெங்களூரு அணி ரசிகர்கள் இந்த ஆண்டு எங்களுக்கு தான் கோப்பை என்று உற்சாகமாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. நேற்று ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். எம்.ஜி.ரோடு, சின்னசாமி கிரிக்கெட் மைதானம், காந்தி பஜார், கோரமங்களா, ஒயிட்பீல்டு உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆர்சிபி ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி உள்பட ஆர்சிபி அணி வீரர்கள் இன்று ஜெயித்த கோப்பையுடன் பெங்களூர் வந்தனர். அவர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியத்தில் திரண்டனர். சிறிய அளவில் பாதையில் ஏராளமானோர் குவிந்ததால், அங்கு எல்லா இடத்திலும் ரசிகர்கள் வெள்ளமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.
அதன்பிறகு கூட்டம் ஒழுங்குப்படும் என்று நினைத்தால் கூட்டம் மிக அதிகமாகவே ஆனது. திடீரென ஒரு இடத்தில் கூட்ட நெரிசலில் முந்த முயன்ற ரசிகர்களால், சிலர் சரிந்து விழுந்தனர். அப்படியே கிட்டத்தட்ட பலர் விழுந்தனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த நெரிசல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் மக்கள் கலங்கிப்போனார்கள். மறக்க முடியாத அளவிற்கு சந்தோஷமான நிகழ்வாக இருக்க வேண்டிய ஆர்சிபி கொண்டாட்டம் இப்படி ஆகிப்போனதை எண்ணி பலரும் வேதனையுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
🚨 Two people including a child, reportedly died in a stampede at Chinnaswamy Stadium during RCB's victory celebrations pic.twitter.com/IFUCeFWgfN
— Prayag (@theprayagtiwari) June 4, 2025
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications