Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானில் ஆட்டம் கண்ட ஹெலிகாப்டர்! கருகிய நடிகை சவுந்தர்யா! 17.04.2004, காலை 11 மணிக்கு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை சவுந்தர்யா (சௌந்தர்யா) மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து முழு விவரங்களையும் பார்க்கலாம். அதாவது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சவுந்தர்யா. இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்த நிலையில் 2003ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியரான ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Soundarya mohan babu

இதைத் தொடர்ந்து சவுந்தர்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அதன் பேரில் அவர் பாஜகவில் இணைந்தார். சவுந்தர்யா நடிகை மட்டுமல்லாமல் அவர் ஒரு மருத்துவரும் கூட!

பாஜகவில் இணைந்த சவுந்தர்யா

பாஜகவில் இணைந்ததும் அவர் பெங்களூரில் இருந்து ஆந்திராவின் கரீம் நகருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றார். இதற்காக அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூர் அருகே ஜக்கூர் விமான தளத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா (Cessna 180) எனும் ஹெலிகாப்டரில் தனது சகோதரர் அமர்நாத்துடன் புறப்பட்டார். மேலும் அந்த ஹெலிகாப்டரில் பாஜக நிர்வாகி ரமேஷ் காதம், விமானி ஜாய் பிலிப்ஸ் ஆகியோர் இருந்தனர்.

காலை 11 மணிக்கு

அதாவது ஆந்திராவின் கரீம் நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டது. அப்போது நேரம் காலை 11 மணி இருக்கும், அதாவது ஹெலிகாப்டர் புறப்பட்டு 5 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், டேக் ஆஃப் ஆனதும் செஸ்னா 150 அடி உயரத்தில் அதற்கு தேவையான வேகத்தை அதிகரித்துவிட்டு இடது பக்கம் திரும்பிய போது வெடித்து சிதறியது.

பெங்களூர் அருகே விபத்து

சரியாக பெங்களூர் அருகே உள்ள காந்தி கிரிஷி விக்யான கேந்திர வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அருகே வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்த வயலில் சோதனை செய்து கொண்டிருந்த இருவர் கூறுகையில் விமானம் வெடிப்பதற்கு முன்னர் மோசமாக தள்ளாடியது. எனினும் அவர்களை காப்பாற்ற விரைந்த போது வெடித்து சிதறியது. இதில் விமானமே தீப்பிழம்பானது, முற்றிலும் நொறுங்கிவிட்டது என தெரிவித்திருந்தனர்.

Soundarya mohan babu

சவுந்தர்யா விபத்து

இந்த விபத்தில் சவுந்தர்யா உள்பட அவருடன் பயணித்த ஒருவர் கூட உயிருடன் இல்லை. சவுந்தர்யா இறக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரில் ஒருவரது உடல் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் கருகிவிட்டன. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கர்நாடகாவின் முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் ஜக்கூருக்கு விரைந்தனர்.

பாஜக நிகழ்ச்சிகள் ரத்து

அந்த நாள் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சவுந்தர்யாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அப்போது சவுந்தர்யா குறித்துதான் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வந்தது. அதன் பிறகு தற்போது 20 ஆண்டுகள் கழித்து சவுந்தர்யா மரணம் குறித்து மீண்டும் பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+