Cauvery: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழை! கபினி, கேஆர்எஸ் அணையின் நீர் மட்டம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது.

Karnataka dams level

இன்றைய தினம் தட்சிண கன்னடா, சிக்மக்ளூர், சிவமோகா உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அது போல் அடுத்த 24 மணி நேரத்தில் உடுப்பி, ஹாசன், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், உத்தர கன்னடா, பெலகாவி, தர்வாத், ஹவேரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பெய்த மழையால் தட்சின கன்னடா, சிவமோகா, குடகு, சிக்மக்ளூர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நீர் நிலைகள், ஆறுகள் நிரம்பி அதன் கொள்ளளவை விட அதிக நீர் பாய்ந்து வருவதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

கர்நாடகாவில் தர்மஸ்தலா அருகே உள்ள பெல்தன்காடி என்ற பகுதியில்தான் மிக கனமழை பெய்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. விளை நிலங்களில் மழை நீர் புகுந்துள்ளதால் பாக்கு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேத்ராவதி, மிருதுன்ஜயா, பல்குனி, சோமவதி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தர்மஸ்தலா டூ உஜிரே சாலையில் வெள்ள நீர் புகுந்ததால் சில மணி நேரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இரு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கஜனூர் அணையில் உள்ள துங்கா நதியில் 75,526 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடகு பகுதியில் தொடர்ந்து 3ஆவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மட்டும் அனைத்து அணைகளிலும் 10 ஆயிரம் கனஅடி நீர் வரத்து ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

மடிகேரி - மங்களூர் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கர்நாடகாவின் மைசூர், மங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடகாவில் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஹாரங்கி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 129 அடி. தற்போது 127.55 அடி நீர் உள்ளது. ஹேமாவதி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 117 அடி. தற்போது 100.98 அடி நீர் உள்ளது.

கபினி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 65 அடி. தற்போது 56.28 அடி நீர் உள்ளது. கேஆர்எஸ் அணையின் அதிகபட்ச நீரின் அளவு 124.8 அடி. தற்போது 91.8 அடி நீர் உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் நிலையில் அங்கு பெய்யும் கனமழையால் அணைகளின் கரை உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் என கருதி நேற்றைய தினம் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது கர்நாடகாவிற்கு வெள்ள நீரால் அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக திறந்துவிடப்பட்டதே தவிர, இவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை மதித்து திறந்துவிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+