14 நாள்.. நிலவில் ரோவர் எப்படி செயல்படும்? பிரக்யான் என்பதற்கு சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம்? ஆஹா
பெங்களூர்: நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் ஆய்வை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரக்யான் என்பதற்கு சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம் என்பதும், 14 நாட்கள் பிரக்யான் ரோவர் நிலவின் தென்துருவத்தில் எப்படி செயல்படும்? என்பது பற்றி முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து உந்துவிசை கலன் புவிவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு புவிவட்ட பாதை என்பது படிப்படியாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் உந்துவிசை கலன் என்பது நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்தது.
இதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி தரையிறங்கியது. மேலும் நிலவின் சுற்றுவட்டபாதையில் இருந்த சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரும் விக்ரம் லேண்டரும் தொடர்பை ஏற்படுத்தி நேற்று மாலையில் சாஃப்ட் லேண்டிங் முறையில் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் என்பது நிலவில் தரையிறங்கி ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே தான் பிரக்யான் ரோவர் நிலவில் எப்படி அடுத்த 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும்? பிரக்யான் என்பதற்கு சமஸ்கிருதத்தில் என்ன பொருள்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ரோவர் கருவிக்கு பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ளது. பிரக்யான் என்பதற்கு சமஸ்கிருதத்தில் Wisdom(அறிவு/ஞானம்) என பொருள்படும். இந்த பிரக்யான் ரோவர் மொத்தம் 26 கிலோ எடையுடன் உள்ளது. பிரக்யான் ரோவர் என்பது மொத்தம் 6 சக்கர வாகனம் போன்று வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்த சக்கரங்கள் 91.7 x 75.0 x 39.7 செமீ அளவில் இடம்பெற்றுள்ளன. இந்த சக்கரத்தின் உதவியுடன் தான் விக்ரம் லேண்டரில் இருந்து சாய்தளம் மூலமாக நகர்ந்து நிலவின் தென்துருவத்தில் பயணித்து 14 நாட்கள் ஆய்வு செய்கிறது. மேலும் பிரக்யான் ரோவரில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் உள்ளன. மேலும் அதற்கு தேவையான ஆற்றலை பெறும் வகையில் 50 வாட் மின்சாரத்தை உருவாக்கும் வகையில் சோலார் பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரோவர் என்பது ஒரு வினாடிக்கு ஒரு சென்டி மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து செல்லும். இந்த ரோவர் தான் நிலவின் தென்துருவத்தின் சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, நிலவின் மேற்பரப்பில் அயனிகள் இருக்கிறதா? இல்லையா? என்பன உள்ளிட்டவற்றை கண்டறிவதில் முக்கிய பங்காற்ற உள்ளது.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்யும் இந்த பிரக்யான் ரோவர் என்பது நேரடியாக அதன் அருகே இருக்கும் விக்ரம் லேண்டருடன் தொடர்பில் இருக்கும். அதாவது பிரக்யான் ரோவர் நிலவின் ஆய்வு தொடர்பான தகவல்களை விக்ரம் லேண்டருக்கு அனுப்பும். இநு்த விக்ரம் லேண்டர் ஆர்ப்பிட்டர் மூலம் பூமிக்கு தகவல்களை வழங்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications