"பெங்களூரில் வாழ்க்கை நடத்த எவ்வளவு சம்பளம் தேவை.." சரமாரியா வந்த பதில் இருக்கே! ரொம்ப ஓவர் தான்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் எவ்வளவு சம்பளம் இருந்தால் வாழ முடியும் என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வி இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூர் இப்போது குட்டி வெளிநாடு போல மாறி வருகிறது என்றே சொல்லலாம். அங்கே ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிப்பது இதற்கு ஒரு காரணம். அதேபோல நாம் வெளிநாடுகளில் மட்டுமே பார்த்த பல சம்பவங்கள் அங்கு நடப்பது மற்றொரு காரணம்.
நத்தை போல ஊர்ந்து செல்லும் வாகனங்கள், நடுரோட்டில் வாகனத்திலேயே லேப்டாப்பை ஒபன் செய்து வேலையில் இறங்கும் "உழைப்பாளிகள்" என்று வினோத காட்சிகள் பல பெங்களூரில் நடந்து வருகிறது.

டிரெண்டிங் சம்பவம்: அதேபோல பெங்களூர் தொடர்பாக இணையத்தில் டிரெண்டாகும் பல கேள்விகளுமே கூட சுவாரசியமாகவே இருக்கும். இப்போது அப்படியொரு சம்பவம் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கல்லூரியில் படித்து முடித்துவிட்டு இப்போது வேலைக்குச் செல்ல ரெடியாக இருக்கும் இளைஞர் ஒருவர், இணையத்தில் ஒரு கேள்வி கேட்கவே அவருக்கு வந்த ரெஸ்பான்ஸை பார்த்து இணைய உலகமே ஸ்டன் ஆகிவிட்டது.
ட்விட்டரில் உலகெங்கும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இணையத்தைப் புரட்டிப் போடும் மெகா பிரச்சினைகள் முதல் சமையலில் உப்பு எவ்வளவு போடலாம் என்பது வரை டைப் டைப்பாக பல விவாதங்கள் நடந்து வருகிறது. பெங்களூர் போன்ற நகரத்தில் எப்படி வாழ்வது எத்தனை ரூபாய் இருந்தால் வாழ முடியும் என்பது குறித்து யாராவது கேட்டால் அதற்கு என்ன மாதிரியான பதில் வரும் என உங்களுக்குத் தெரியுமா.. வாங்க பார்க்கலாம்.
கேட்டார் பாருங்க கேள்வி: இஷான் ஷர்மா என்ற இளைஞர் ஒருவர் ட்விட்டர் தளத்தில் ஒரு சின்ன கேள்வியைக் கேட்டிருந்தார். அதுதான் பல வித பதில்கள் வர காரணமாக அமைந்துவிட்டது. பெங்களூரில் வாழ்வதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்று அவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பல வித பதில்கள் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
சிலர் ஓரளவுக்குத் துல்லியமான பதிலைத் தர முயன்றுள்ளனர். இருப்பினும், பலரும் அவருக்கு ப்ரீயாக இருக்கிறோம் என்பதற்காக அட்வைஸை வாரி வழங்கியுள்ளனர். நெட்டிசன் ஒருவர், "2023இல் நிம்மதியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால், படித்தும் முடித்த 22 வயதான நபருக்கு ரூ. 30,000 தேவை. 26 வயதான பேட்சுலருக்கு 50,000 தேவை.. திருமணமான உழைக்கும் தம்பதிக்கு அவர்களின் 30 வயதில் ரூ. 75,000 தேவை. திருமணமாகி குழந்தைகளுடன் உள்ள தம்பதிக்கு 1,00,000 தேவைப்படும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பதில்கள்: மற்றொரு நபர் பெங்களூரில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாது எனப் பதிலளித்துள்ளார். இன்னும் சிலர் 30 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பம் நடத்த முடியும் எனச் சொல்லியுள்ளார். மற்றொருவர் சாதாரணமாக வாழ்க்கை நடத்த 40-50 ஆயிரம் தேவை. அதேநேரம் சொகுசு வாழ்க்கை வேண்டும் என்றால் 80- 90 ஆயிரம் வரை தேவை எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவர் பெங்களூரில் எங்கு வசிக்கிறார்.எங்கு வேலை செய்கிறார் என்பதைப் பொறுத்தும் இது மாறுபடும் எனப் பதிவிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன், பெங்களூரில் புதிதாக வேலைக்குச் சேர்வோருக்கு ஊதியம் குறைவாக இருப்பதாகப் பெண் ஒருவர் ட்வீட் செய்திருந்ததும் டிரெண்டிங் ஆனது. அந்த பெண், "புதிதாக வேலை தேடும் ப்ரஷ்ஷர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்க என்ன காரணம்.. ஒரு மெட்ரோ நகரத்தில் வாழ ரூ 50 ஆயிரம் எல்லாம் போதாது. ஏன் சம்பளம் இவ்வளவு குறைவாக உள்ளன? ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் மட்டும் சம்பாதித்தால் எப்படிச் சேமிக்க முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications