Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கோபப்பட்டாலும் பரவாயில்லை.. புலிகேசியில் துணிச்சலாக இறங்கிய எடப்பாடி! பின்னணியில் ராஜதந்திரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதற்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

 What is the reason behind Edappadi Palanisamy fielding an AIADMK candidate against BJP in Karnataka?

அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எடப்பாடி பதவி செல்லும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கர்நாடக தேர்தல் நெருங்குவதால் இதில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதில் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட வேண்டியுள்ளது.

அதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஆனால் இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல் இருப்பதால் எங்களால் பணிகளை செய்ய முடியவில்லை.

ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரின் வாதத்தை ஏற்க கூடாது. தேர்தல் ஆணையம் இதில் உடனே முடிவு எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று வாதம் வைத்தார்.

இதில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.. ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் 10 நாட்களில் முடிவு செய்வோம் என்று குறிப்பிட்டார்.

பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில்தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது.

புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அங்கே பாஜகவை ஆதரிக்காமல் தனியாக அதிமுக போட்டியிடுகிறது.

இங்கே போட்டியிடுவது அதிமுகவிற்கு அவ்வளவு அவசியம் இல்லை. ஆனாலும் அதிமுக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட முக்கிய காரணங்கள்.

1. வேட்பாளரை களமிறக்க இரட்டை இலை சின்னத்தை கேட்க முடியும்.

2,. தேர்தலுக்கு நாளையோடு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவதால், நாளை காலைக்குள் தேர்தல் ஆணையம் எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியும்.

அங்கே பாஜகவை எதிர்த்து அதிமுக களமிறங்குகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம்.

 What is the reason behind Edappadi Palanisamy fielding an AIADMK candidate against BJP in Karnataka?

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடியும்.. பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.

அமித் ஷா கூட்டணி உள்ளது என்று சொல்லியும் கூட்டணியை எதிர்த்து எடப்பாடி வேட்பாளரை களமிறக்கி உள்ளார். டெல்லி கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று எடப்பாடி வேட்பாளரை களமிறக்க காரணமே சின்னத்தை கைப்பற்றத்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+