Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை, பிங்க் கலரில் ஜொலித்த பெங்களூர் வானம்.. ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்.. ஓ இதுதான் காரணமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நேற்றிரவு வானத்தைப் பார்த்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து இருக்கும். பிங்க், பச்சை என்று கலர் கலராக வானம் ஜொலித்தது. அது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்து. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் குழம்பி போய் இருந்த நிலையில், இது குறித்து ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலம் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. இதில் நடக்கும் பல மாற்றங்கள் நாம் வியந்து போகும் வகையிலேயே இருக்கும்.

bangalore science

அப்படி தான் பெங்களூர்வாசிகள் நேற்றிரவு வானத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டார்கள். வானில் பொதுமக்கள் கண்ட காட்சி பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. அதாவது வானம் பிங்க், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கலர் கலராக மாறியிருக்கிறது.

பெங்களூர்வாசிகள் ஷாக்: இதைப் பார்த்த பெங்களூர் மக்கள் ஆச்சரியமடைந்தனர். வானில் ஏன் இந்த மாற்றம் என்று பெங்களூர் மக்கள் குழம்பிப் போனார்கள். மேகம் கலர் மாறிவிட்டதா இல்லை வளிமண்டல நிகழ்வா என்று பல வகையான தகவல்கள் பரவின. இது தொடர்பான போட்டோக்களும இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஏதோ வானில் கலர் லைட் போட்ட மாதிரி கலர் கலராக வானம் ஜொலித்தது பலரையும் வியக்க வைத்தது.

பெங்களூர் வானில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து பலரும் பல வித கருத்துகளைக் கூறி வரும் நிலையில், இதற்கான உண்மை காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. Comet எனப்படும் வால் நட்சத்திரம் ஒன்று பெங்களூருக்கு மேலே சென்றுள்ளது. இதன் காரணமாகவே வானம் கலர் கலராக ஜொலித்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

என்ன காரணம்: C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் தான் இதற்குக் காரணம். இது பூமியை நெருங்கி வந்ததாலேயே பெங்களூரில் வானம் கலர் கலராக மாறியுள்ளது.

வால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரை periodic comets மற்றும் non- periodic comets என இரண்டு வகை உள்ளன. periodic comets என்பவை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது பூமிக்கு அருகே வரும். அதேநேரம் non- periodic comets என்பது அரிதாகவே பூமிக்கு அருகே வரும். சரியாக எப்போது வரும் என்பதைக் கனிக்கவே முடியாது. இவை நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வால் நட்சத்திரம் கடந்த இரண்டு நாட்களாகவே பெங்களூரில் பல அற்புதமான காட்சிகளை உருவாக்கியுள்ளன. இப்போது இணையத்தில் அந்த படங்களே டிரெண்டாகி வருகிறது.

வால் நட்சத்திரம்: இந்த அற்புதத்திற்குக் காரணமான C/2023 A3 வால் நட்சத்திரம் முதலில் கடந்த 2023 ஜனவரி 9ம் தேதி சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டென் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. நாளை இரவு வரை ஹைதராபாத் மக்களாலும் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்த்து ரசிக்க முடியுமாம். இந்த குறிப்பிட்ட வால்நட்சத்திரம் சுமார் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்திற்கு அருகே வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அருகே என்றால் ஏதோ சில நூறு கிமீ தொலைவு என நினைத்துவிடாதீர்கள். இது இப்போது பூமியில் இருந்து சுமார் 129.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. செக்ஸ்டன்ஸ் விண்மீன் தொகுப்பில் இந்த விண்மீன் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+