என்னை தூக்கி உள்ளே போட்டவர்களை மறக்க மாட்டேன்.. அதுக்குதான் இந்த தாடி.. அதிர வைத்த டிகே சிவக்குமார்

என்னை தூக்கி திகார் சிறையில் உள்ளே வைத்தவர்களை நான் மறக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த தாடி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: என்னை தூக்கி திகார் சிறையில் உள்ளே வைத்தவர்களை நான் மறக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த தாடி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவரின்கைது காங்கிரஸ் கட்சியை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ப. சிதம்பரத்தை தொடர்ந்து இவரும் கைது செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது.

எப்படி இவர்

எப்படி இவர்

காங்கிரஸ் கட்சியின் சிங்கம் என்றுதான் காங்கிரஸ் தொண்டர்கள் டிகே சிவக்குமாரை அழைத்து வந்தனர். அனைத்து கட்சியினருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் டிகே சிவக்குமார், மொத்த காங்கிரஸ் கட்சியையும் கர்நாடகாவில் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் என்றுதான் கூற வேண்டும். இவர் சினிமா பட வில்லன் அளவிற்கு மிகவும் கெத்தாக கர்நாடகாவில் வலம் வந்தார்.

ஆனால் கைது

ஆனால் கைது

ஆனால் இவரையே அமலாக்கத்துறை கைது செய்தது.அதன்பின் தற்போது இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் தாடி வைத்து டெரராக இருக்கிறார். நாளை அங்கு நடக்க உள்ள 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக நேற்று வரை அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மிகப்பெரிய அளவில் அவருக்கு மக்கள் வரவேற்பு தந்தனர்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில் தன்னுடைய அரசியல் திட்டங்கள் குறித்து பிரச்சாரத்தின் போது அவர் நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், நான் இப்போது மிகவும் வலிமையாக இருக்கிறேன். அதனால் எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது. அதனால் என்னை குறி வைக்கிறது.

தாடி காரணம்

தாடி காரணம்

நான் தாடி வைக்க இரண்டு காரணம் இருக்கிறது. அதை பார்க்கும் மக்களுக்கு என்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் முகம் நினைவிற்கு வரும். எனக்கும், என்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களின் முகம் நினைவிற்கு வரும். என்னை உள்ளே தள்ளியவர்களை நான் மறக்க மாட்டேன்.

திட்டம் ள்ளது

திட்டம் ள்ளது

அவர்களை நான் நினைவில் வைத்து இருப்பேன். அவர்களுக்கான திட்டங்களை நான் வகுப்பேன். 35 வருடமாக கர்நாடக மக்கள் என்னை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நான் யார் என்று தெரியும். நான் எப்போது எப்படி நடப்பேன் என்றும் தெரியும்.

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை

எனக்கு ஏற்பட்ட பிரச்னையை அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டதாக பார்க்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு சரியாக பதிலடி கொடுப்பார்கள். பாஜக மீது மக்களுக்கு இருக்கும் கோபம் வரும் சட்டசபை இடைத்தேர்தலில் அம்பலம் ஆகும், என்று டிகே சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+