ஆஹா! பெங்களூர் பிராந்தியத்தில் செம பர்ஃபாமன்ஸ் கொடுக்கும் பாஜக.. 28-க்கு பலன் கொடுக்கும் 26 கி.மீ.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் நடத்திய பேரணி பலன் கொடுத்தது என்பதையே காட்டுகிறது வாக்கு எண்ணிக்கை.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. அப்போது மோடி மேஜிக் என்றும் மோடி அலை என்றும் சில சொற்களை பாஜகவினர் பயன்படுத்தியிருந்தனர். பிரதமர் மோடியின் மேஜிக்கால்தான் 2019 ஆம் ஆண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஏற்பட்டது என நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

மேலும் உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் மோடிதான் என்றும் பிரதமர் மோடியின் சொல்லுக்கு உலக தலைவர்கள் கட்டுப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவுக்கு சட்டசபை தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடந்தது.

Whether Modi Bangalore rally gives benefit to karnataka assembly election 2023?

இந்தத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் பிராந்தியத்தில் உள்ள 28 தொகுதிகளை குறி வைத்து பேரணி ஒன்றை நடத்தியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 26 கிலோமீட்டருக்கு 3 மணி நேரம் திறந்த பிரச்சார வாகனத்தில் பேரணியாக பிரதமர் சென்றார். அவர் சென்ற இடங்களில் மலர் தூவி அவரை பாஜகவினர் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

சுமார் 3 நாட்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட பாஜக நிர்வாகியின் செல்போன் பிரச்சார வாகனத்தில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணையில் ஆரவாரம் செய்த போது கையில் இருந்த போன் தவறி விழுந்ததாக அந்த பாஜக நிர்வாகி விளக்கம் அளித்திருந்தார். சாலையின் இரு புறங்களிலும் மோடி, மோடி என கோஷங்கள எழுந்தன. வடமாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கி இருந்தது. இதற்கு காரணம் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று முதல்வராக சித்தராமையா இருந்தார்.

அவர் மீது எந்த ஒரு ஊழல் புகாரும் இல்லாமல் இருந்தது. எனவே இந்த முறை ஹிஜாப், இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் பாஜகவுக்கு தோல்வி ஏற்படக் கூடாது என்பதற்காக பிரதமர் மோடி புதிய உத்தியை கையில் எடுத்தார். இந்த உத்தி பாஜகவுக்கு கை கொடுத்ததாகவே தெரிகிறது.

பிரதமர் மோடி பேரணி நடத்திய இந்த பெங்களூர் பிராந்தியத்தில் உள்ள 28 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 11 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றது. இந்த முறை பெங்களூர் பிராந்தியத்தில் பாஜகவின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+