பெங்களூர் ஏர்போர்ட் தான் பெஸ்ட்! சர்வதேச ரேங்கில் முதலிடம்.. லிஸ்டில் மற்றொரு தென்னிந்திய நகரம்! செம

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சர்வதேச அளவில் மிகவும் துல்லியமாக அதாவது பஞ்சுவாலிட்டி (punctualit) அடிப்படையில் இயக்கப்படும் விமான நிலையங்கள் லிஸ்டில் டாப் 5இல் இந்தியாவில் இருந்து இரு ஏர்போர்ட்டுகள் இடம்பெற்றுள்ளது.

Cirium என்ற அமைப்பு சர்வதேச அளவில் இருக்கும் விமான நிலையங்களை ஆய்வு செய்து எந்தெந்த விமானங்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்பது குறித்த லிஸ்டை ரெடி செய்து வெளியிடுகிறது.

 Which two Indian cities came into top 5 ranking for on time performance in airports

அதில் தான் தென்னிந்தியாவில் இருந்து இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளது. குறிப்பாகக் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இதில் உலகளவில் டாப் இடத்தில் இருக்கிறது.

பெங்களூர் முதலிடம்: இந்த லிஸ்டில் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து சுமார் 18,193 விமானங்கள் சரியான நேரத்தில் கிளம்பிச் சென்றுள்ளது. அதாவது பெங்களூர் ஏர்போர்ட் 88.51% சரியான நேரத்தில் புறப்பட்டு சென்றுள்ளது. அதேபோல 79.46% விமானங்கள் சரியான நேரத்தில் வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த லிஸ்டில் பெங்களூர் தான் டாப் இடத்தில் இருக்கிறது.

பெங்களூர் ஏர்போர்ட்டை பொறுத்தவரே அங்கே சராசரி தாமதம் என்பத 50 நிமிடங்களாக மட்டுமே இருக்கிறது. இது அதிகம் போலத் தெரிந்தாலும் மற்ற விமான நிலையங்களில் ஏற்படும் சராசரி தாமதத்தைக் காட்டிலும் இது மிக மிகக் குறைவாகும். பெங்களூர் ஏர்போர்ட்டில் மொத்தம் 35 விமான நிறுவனங்கள் 88 வழித்தடங்களில் சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..

ஹைதராபாத் ஏர்போர்ட்: அதேபோல செப்டம்பருக்கான இந்த லிஸ்டில் மற்றொரு தென்னிந்திய நகரம் இடம்பிடித்துள்ளது. அது வெறு எதுவும் இல்லை.. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் தான் சர்வதேச அளவில் லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

செப். மாதத்திற்கான தரவுகள் படி ஹைதராபாத் ஏர்போர்ட் மொத்தம் 13,973 விமானங்களைக் கையாண்டுள்ளது... அதில் 86.48% விமானங்கள் சரியான நேரத்தில் கிளம்பிச் சென்றுள்ளது. அதேபோல 81.38% விமானங்கள் சரியான நேரத்திற்கு வந்துள்ளது. இது சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சராசரி தாமதத்தில் இது பெங்களூரை விடச் சிறப்பானதாக இருக்கிறது.

 Which two Indian cities came into top 5 ranking for on time performance in airports

ஏற்ற இறக்கம்: இங்கே சராசரி தாமதம் என்பது வெறும் 45 நிமிடங்களாகவே உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து மொத்தம் 27 விமான நிறுவனங்கள் 76 வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வருகின்றன. இதில் நாம் ஹைதராபாத் விமான நிலையத்தைப் பார்த்தால் அது இந்தாண்டு முழுக்க பஞ்சுவல் லிஸ்டில் ஏற்ற இறக்கங்களையே அதிகமாகக் கொண்டுள்ளது.. கடந்த ஜனவரி மாதத்திற்கான லிஸ்டில் ஹைதராபாத் ஏர்போர்ட் ஆறாவது இடத்தில் இருந்தது.

கடந்த பிப். மாதம் இது மூன்றாவது இடத்திற்குச் சென்ற நிலையில், மார்ச் மாதம் முதலிடத்திற்குச் சென்றது. தொடர்ந்து ஏப்ரலில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், மே மாதம் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மீண்டும் ஜூன் மாதம் மூன்றாவது இடத்திற்கு வந்த ஹைதராபாத் ஏர்போர்ட் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இப்போது செப். மாதத்திற்கான டேட்டாவில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது.

சர்வதேச ஏர்போர்ட்கள்: இந்த லிஸ்டில் இடம்பெற்ற இரண்டு இந்திய விமான நிலையங்கள் என்றால் அது பெங்களூரும் ஹைதராபாத்தும் தான். இந்த ஸிஸ்டில் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிலையங்களே உள்ளது. அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், அங்குள்ள மினியாபோலிஸ்- செயின்ட் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது டாப் 10இல் 5 விமான நிலையங்கள் அமெரிக்காவில் இருந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+