Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூனியர் தான்.. ஆனாலும் கார்கே மகனுக்கு மந்திரி பதவி.. கர்நாடகா 8 அமைச்சர்களின் ‛பயோ’ இதோ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் புதிய அமைச்சர்களாக இன்று 8 பேர் பதவியேற்கின்றனர். இதில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களின் பின்னணி விபரம் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரையும் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. இவர்கள் 2 பேரும் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

Who are Karnataka 8 new ministers including Mallikarjun Kharge son Priyank Kharge, details here

இவர்களுடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெயர் பட்டியல் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

பரமேஸ்வர்: இதில் பரமேஸ்வர் துமகூர் மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். 7 ஆண்டு வரை கர்நாடகா மாநில தலைவராக செயல்பட்டார். 2013ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர் தான் மாநில தலைவராக இருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பரமேஸ்வர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018 ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்த முறையும் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளராக இருக்கிறார்.

கேஎச் முனியப்பா: அடுத்ததாக கேஎச் முனியப்பா. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் 7 முறை எம்பியாக இருந்துள்ளார். மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2019 தேர்தலில் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் தோற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அமைச்சராக உள்ளார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

ராமலிங்க ரெட்டி: மேலும் அமைச்சராகும் ராமலிங்க ரெட்டி பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் 8 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்து துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளை அமைச்சராக நிர்வகித்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2013-2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், பெங்களூர் பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

கேஜே ஜார்ஜ்: இன்னொரு அமைச்சரான ஜேஜே ஜார்ஜ் பெங்களூர் சர்வக்ஞ நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 ல் வெற்றி பெற்ற நிலையில் 4வது முறையாக இப்போது ஜெயித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதவாளர்கள். இதற்கு முன்பும் சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூர் நகர வளர்ச்சி துறை, உள்துறை அமைச்சராக செயல்பட்டு இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமீர் அகமது கான்: பெங்களூர் சாம்ராஜ் பேட்டை தொகுதி எம்எல்ஏவாக ஜமீர் அகமது கான் உள்ளார். இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்து 2018 ல் வென்றவர் இந்த முறையும் வாகை சூடியுள்ள நிலையில் இன்று அமைச்சராகிறார்.

எம்பி பாட்டீல்: அதேபோல் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவ இவர் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 4 வது முறையாக தொடர்ந்து ஜெயித்துள்ளார். இவர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சதீஷ் ஜார்கிகோளி: அதேபோல் இன்னொரு அமைச்சரான சதீஷ் ஜார்கிகோளி பெலகாவி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார். இவர் மற்றும் இவரது 3 சகோதரர்கள் அரசியலில் உள்ளனர். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர்களில் ஒருவரான ரமேஷ் ஜார்கிகோளி கடந்த 2018 ல் அமைந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றினார். பாஜகவில் இணைந்து அமைச்சரான ரேமஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வெளியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்த நிலையில் இந்த தேர்தலில் அவர் பாஜகவில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

பிரியங்க் கார்கே: மேலும் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவும் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2008 ல் மல்லிகார்ஜூன கார்கே இருந்தார். இதையடுத்து அவர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அந்த தொகுதியில் பிரியங்க் கார்கே போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். 2018 ல் வென்ற அவர் மீண்டும் சித்தாபூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகிறார். இதன்மூலம் இன்று பதவியேற்கும் அமைச்சர்களை பார்க்கும்போது அரசியலில் மிகவும் ஜூனியராக தான் பிரியங்க் கார்கே இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+