பெங்களூரின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? டாப் 8 பேரின் லிஸ்ட்.. இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு இடம்
பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூர் என்பது பல கோடீஸ்வரர்களின் தாயகமாக உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரின் டாப் 8 பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் இடம்பிடித்துள்ளார்.
நம் நாட்டின் ‛சிலிக்கான் சிட்டி' என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இங்க பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதோடு பெங்களூரில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரிக்கிறது. இதனால் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உதயமாகி வருகின்றன.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் எப்படி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூருவுக்கு முக்கிய பங்குண்டு. கர்நாடகா பொருளாதாரத்தில் பெங்களூர் நகர் மட்டுமே 43.65 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது.
இது ஒருபுறம் இருக்க நம் நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் பலரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் 2025ம் ஆண்டில் பெங்களூரில் நகரில் டாப் 8 பணக்காரர்கள் யார் என்பது பற்றிய பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
முதலிடத்தில் அஜிம் பிரேம்ஜி
பெங்களூரின் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அஜிம் பிரேம்ஜி. இவர் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 32.2 பில்லியன் முதல் ரூ.35.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அவரது சொத்து மதிப்பு ரூ.2.8 லட்சம் கோடி முதல் ரூ.3.15 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இர்பான் ரசாக்
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் இர்பான் ரசாக். இவர் பிரஸ்டேஜ் எஸ்டேட் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். இர்பான் ரசாக்கின் சொத்து மதிப்பு என்பது 6 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.52 ஆயிரம் கோடியாகும்.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் நாராயண மூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக இவர்து சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் ரூ.41,500 கோடியாகும். இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இன்போசிஸ் நிறுவன்ஙகளில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.39,658 கோடியாக உள்ளது.
கிரண் மஜூம்தார்
இந்த பட்டியலில் 5வது இடத்தில் கிரண் மஜூம்தார் உள்ளார். இவர் பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.30,854 கோடியாக உள்ளது. 6வது இடத்தில் ரஞ்சன் பாய் உள்ளார். மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவ குழுமத்தின் தலைவராக ரஞ்சய் பாய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.25,595 கோடியாக உள்ளது.
நிகில் காமத்
அதேபோல் 6வது இடத்தில் இருப்பவர் நிகில் காமத். இவர் ஜெரோடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள நிதின் காமத்தின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.2,280 கோடியாக உள்ளது. 22,241 கோடியாக உள்ளது. 8 வது இடத்தில் ஜிதேந்திர வீர்வானி உள்ளார். இவர் Embassy Group தலைவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.14.012 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications