சித்தராமையாவின் ‘ஸ்டிங் ஆபரேஷன்' பின்னணியில் கிருபா ஆல்வா! யார் இந்த காங்கிரஸ் பெண் தலைவர்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா அரசியலில் தற்போது சித்தராமையாவின் 'ஸ்டிங் ஆபரேஷன்' விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வீடியோவால் சித்தராமையாவின் மொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் தன்னை டார்க்கெட் செய்து 'ஸ்டிங் ஆபரேஷன்' செய்தது காங்கிரஸ் கட்சியின் கிருபா ஆல்வா தான் என்று சித்தராமையா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

who-is-kripa-alva-siddaramaiah-alleges-about-his-sting-operation-master-mind

கர்நாடகாவில் தற்போது 'ஸ்டிங் ஆபரேஷன்' விவகாரம் தான் பூதாகரமாகி உள்ளது. இதற்கு முன்பு பல 'ஸ்டிங் ஆபரேஷன்' வீடியோவில் அமைச்சர்கள் பதவியை இழந்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா சிக்கி உள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரான சித்தராமையாவுக்கு தெரியாமல் 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'ஸ்டிங் ஆபரேஷன்' என்பது என்ன?

'ஸ்டிங் ஆபரேஷன்' என்பது ஒருவருக்கு தெரியாமல் திட்டமிட்டு அவரை ரகசியமாக வீடியோ எடுப்பதாகும். ஸ்டீங் ஆபரேஷனை எடுத்து கொண்டால் பல்வேறு வகைகள் உள்ளன. ஒருவரின் அந்தரங்க செயல்களை வீடியோ எடுப்பது, லஞ்சம், முறைகேடு தொடர்பாக பேசுவதை வீடியோ எடுப்பது என பல வகைகள் உள்ளன.

பிறகு அந்த வீடியோவை குறிப்பிட்ட நபரிடம் காண்பித்து மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வார்கள். குறிப்பாக பணம், பதவிகளை குறிவைத்து இதுபோன்ற செயல்கள் கர்நாடகாவில் அடிக்கடி நடக்கும். பல அரசியல்வாதிகள் இந்த 'ஸ்டிங் ஆபரேஷனில்' பதவியை இழந்துள்ளனர்.

சித்தராமையா வீடியோவில் இருப்பது என்ன?

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை 'ஸ்டிங் ஆபரேஷன்' செய்து வீடியோ ஒன்று எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோவால் சித்தராமையாவின் மொத்த புகழுக்கும் களங்கம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த சித்தராமையா முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடி அவதூறு பரப்பும் 'ஸ்டிங் ஆபரேஷன்' வீடியோ வெளியிட தடை வாங்கி வைத்துள்ளார். தற்போது வரை வீடியோ வெளிவராத நிலையில் அதில் என்ன உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது.

போலீஸ் விசாரணை

அதேவேளையில் இந்த வீடியோ வெளிவந்தால் சித்தராமையின் மொத்த பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி முன்கூட்டியே அறிந்த சித்தராமையா தன்னை ரகசியமாக கண்காணித்து 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தியவர்கள் மீது கைது செய்ய வேண்டும் என்று குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் குற்றச்சாட்டுகள்

இதற்கிடையே தான் அமைச்சர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் டிகே சிவக்குமார் அறிவுரை வழங்கி உள்ளார். இதுஒருபுறம் தான் சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்ற டிகே சிவக்குமார் தான் இந்த 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தியதாக மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.

மவுனம் கலைத்த சித்தராமையா

கர்நாடகா அரசியலில் இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் முதல் முறையாக சித்தராமையா மவுனம் கலைத்துள்ளார். தன்னை ரகசியமாக வீடியோ எடுத்தது யார்? என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி சித்தராமையா இன்று மைசூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கிருபா ஆல்வா - ராகேஷ் செட்டி

'' ரகசிய வீடியோ விவகாரம் கடந்த செப்டம்பர் மாதம் என் கவனத்திற்கு வந்தது. மங்களூருவை சேர்ந்த கிருபா ஆல்வாவுவும்,'பவர் டிவி'யை சேர்ந்த ராகேஷ் செட்டி ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர். ராகேஷ் செட்டி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். உண்மை பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, நானே முன்வந்து போலீசில் புகார் அளித்தேன்.

ரகசிய வீடியோவில் துளியும் உண்மையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. என்னை மிரட்டி பணம் பறிப்பதற்காக திட்டமிடப்பட்ட ஒரு சதி. பொய் குற்றச்சாட்டுகளையும், தீய நோக்கத்துடன் கூடிய பிரசாரங்களையும் பரப்புவதை தடுக்க நான் கோர்ட்டில் தடை உத்தரவைப் பெற்றுள்ளேன்.

நான் 1984ல் முதல் முறையாக அமைச்சரானேன். அதன்பிறகு 2 முறை முதல் அமைச்சராக இருந்துள்ளேன். நான் முதல் அமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

சொந்த கட்சியினரே?

தற்போதைய அரசியல் சூழலில், இத்தகைய மிரட்டும் தந்திரங்கள் கையாளப்படுகின்றன.
சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்கள், அவர்கள் பேசிக்கொள்ளட்டும். இந்த சதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவர வேண்டும். இதில் சொந்த கட்சியினருக்கு தொடர்புள்ளதா அல்லது எதிர்க்கட்சியினருக்கு தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பிறகே தெளிவாகும்.இதில் வெளிப்படையான விசாரணை தேவை.

அரசின் விசாரணையின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது வேறு எந்த உயர்மட்ட விசாரணையும் தேவையில்லை. இந்த சதியை திட்டமிட்டவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது'' என்றார்.

கிருபா ஆல்வா யார்?

கிருபா ஆல்வா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். சித்தராமையா முதல் முறையாக 2013 முதல் 2018 வரை கர்நாடகா முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநில தலைவராக 2015ம் ஆண்டில் கிருபா ஆல்வா நியமிக்கப்பட்டார்.

சமூக ஆர்வலராகவும் இருக்கும் கிருபா ஆல்வா தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி வந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கிருபா ஆல்வா தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.

இவரது கணவர் பெயர் அமர் ஆல்வா. இவர் காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக வளர்ந்து வந்தார். 1992ம் ஆண்டில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர்.

கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை

இந்நிலையில் தான் கிருபா ஆல்வாவிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு show Cause நோட்டீஸ் அனுப்ப கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பிகே ஹரிபிரசாத் கூறியுள்ளார். அதன்பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+