கர்நாடகா முதல்வராக யார் வேண்டும்? 5 முக்கிய தலைவர்களில் ‛டாப்’ இவர் தான்.. சர்வே சொல்வது என்ன?
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய மக்களாக யார் வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 5 பேருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் யார்? யார் முதல்வராக வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் என்ற முழுதகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் பல கட்சிகளும் கோதாவில் குதித்துள்ளன.

இருப்பினும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தங்களது கட்சிகள் சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சியினர் உள்ளிட்டவர்கள் அடுத்த முதல்வரை அறிவிப்பதில் அமைதி காத்து வருகின்றனர்.
இருப்பினும் கூட பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் அடுத்த முதல்வராக யார் வேண்டும் என்பது தொடர்பாக இந்த கருத்து கணிப்புகளில் மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தான் தற்போது சவுத் பர்ஸ்ட்(South First) எனும் நியூஸ் வெப்சைட் மற்றும் பிபிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) எனும் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 56 சட்டசபை தொகுதிகளை குறிவைத்து 280 பூத்களை சேர்ந்த 5,600 பேரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பில் கர்நாடகாவின் புதிய முதல்வராக யார் வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் 5 பேருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் யார்? யாரை முதல்வராக வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் என்ற முழுதகவல் வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தான் முதல்வராக வர வேண்டும் என அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போதைய கருத்து கணிப்பின்படி 32 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக தெரிவித்துள்ளனர். சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தார். தற்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளது.

அதன்பிறகு இந்த கருத்து கணிப்பில் 2வது இடத்தில் பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளார். லிங்காயத் சமுதாயத்தின் முகமாக உள்ள எடியூரப்பா அரசியலில் ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் கூட இவர் மீண்டும் முதல்வராக 25 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளார். இவர் முதல்வராக வர வேண்டும் என 20 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பில் 4 வது இடத்தில் ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி உள்ளார். இவர் முதல்வராக வர வேண்டும் என்று 18 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடைசி இடத்தில் டிகே சிவக்குமார் உள்ளார். இவர் முதல்வராக வேண்டும் என 5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிகே சிவக்குமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அமைந்தால் சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு தான் முதல்வர் இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications