ஆசை ஆசையாக.. "கிட்னி"யோடு நின்ற ஆடிட்டர்..இதுல SBI வங்கி வேற.. படிச்சவங்களே இப்படி இருந்தால் எப்படி
பெங்களூர்: பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்களே.. அப்படித்தான் ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது..!!!
பெங்களூருவில் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர் அந்த நபர்.. 46 வயதாகிறது.. ஒரு கம்பெனியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு நிறைய கடன் இருந்திருக்கிறது.. கடனை அடைக்க முடியாமல் தினம் தினம் விழிபிதுங்கி வந்திருக்கிறார்.

கடன் தொகை: லட்சக்கணக்கில் கடன் இருந்ததால், நிம்மதியில்லாமல் தவித்துள்ளார்.. மேலும் அந்த கடனை, உடனடியாக அடைக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு யாரிடமும் உதவி கேட்காமல், தன்னுடைய கிட்னியை விற்க முடிவு செய்தார். ஆனால், கிட்னியை எப்படி விற்பது என்று தெரியவில்லை.
அதனால், கூகுளில் கிட்னியை விற்பது எப்படி? என்று தேடியிருக்கிறார்.. அப்போது, htkidneysuperspecialist.org, என்ற வெப்சைட்டில், சிறுநீரகங்கள் விற்பனை செய்வது குறித்த விவரங்களை பார்த்துள்ளார். அதில், 9631688773 போன் நம்பரும் தரப்பட்டிருந்தது.. உடனே அந்த நம்பருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.
வாட்ஸ்அப் மெசேஜ்: அவர்களும் ஒரு வாட்ஸ்அப் நம்பரை தந்து, மெசேஜ் அனுப்புமாறு சொல்லியிருக்கிறார்கள்.. அதாவது, பெயர், முகவரி, ரத்த வகை போன்ற அடிப்படை விவரங்களை பதியுமாறு சொல்லவும், அப்படியே சம்பந்தப்பட்ட ஆடிட்டரும் மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறார்.. சிறிது நேரத்தில், சிறுநீரகத்துக்கு 2 கோடி ரூபாய் தருவதாகவும், அதில் பாதி பணத்தை முன்பணமாக தருவதாகவும் எதிர்தரப்பிலிருந்து பதில் வந்தது.
ஆனால், இந்த நடைமுறைக்கு முதலில் NOC மற்றும் பதிவுக்கட்டணமாக ரூ. 8000-ம், பதிவீடு செய்வதற்காக ரூ. 20,000-ம் கேட்டுள்ளனர்.. இந்த தொகையையும் ஆடிட்டர் அனுப்பியுள்ளார்.. பிறகு, குறியீட்டை இயக்க வேண்டுமானல், ரூ.85,000 கட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. அந்த தொகையையும் ஆடிட்டர் அனுப்பியுள்ளார்.
பலமுறை யாரோ உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள், உடனே போலீசில் புகார் செய்யுங்கள் என்ற அட்வைஸ் தந்துள்ளனர். அதற்கு பிறகே ஆடிட்டர் போலீசுக்கு ஓடினார்.. பெங்களூரு சைபர் பொருளாதாரப் பிரிவு போலீஸாரிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகாரையும் தந்தார்.. உடனடியாக மோசடியின் கும்பலில் வங்கி கணக்கை போலீசார் முடக்கிவிட்டார்கள்.. தொடர்ந்து அந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..
வருமான வரி: பணத்தை, உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டுமானால், வரி தொடர்பாக ரூ. 5 லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்.. இந்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும் ஆடிட்டர் அனுப்பியுள்ளார்.. இதற்கு பிறகு எஸ்பிஐ வங்கியிலிருந்து ஒரு போன் வந்துள்ளது.
வங்கியிலிருந்து பேசுவதாக கூறிய ஒரு பெண், நிறைய பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிவிடுகிறார்கள், எனவே நீங்கள் பயங்கரவாதி இல்லை என்பதற்காக 7.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். இப்போதுதான் ஆடிட்டருக்கு லேசாக விழிப்பு வந்தது.. இவ்வளவு ஃபார்மாலிட்டி கேட்கிறார்களே என்று சந்தேகமடைந்து, தன்னுடன் வேலைபார்க்கும் சக ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டார்... எல்லாவற்றையும் கேட்டு, ஊழியர்கள் அதிர்ந்துபோனார்கள்..
போலீஸ்: பலமுறை யாரோ உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள், உடனே போலீசில் புகார் செய்யுங்கள் என்ற அட்வைஸ் தந்துள்ளனர். அதற்கு பிறகே ஆடிட்டர் போலீசுக்கு ஓடினார்.. பெங்களூரு சைபர் பொருளாதாரப் பிரிவு போலீஸாரிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகாரையும் தந்தார்.. உடனடியாக மோசடியின் கும்பலில் வங்கி கணக்கை போலீசார் முடக்கிவிட்டார்கள்.. தொடர்ந்து அந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..
அதாவது இந்த ஆடிட்டர், எப்போதோ ஒரு கார் வாங்கியிருக்கிறார்.. ஆனால், அதற்கான தவணைகளை நீண்ட காலமாக கட்டாமல் இருந்திருக்கிறார்.. தவணையை அடைக்காததால், கிரெடிட் கார்டுகளின் கடன்களில் வட்டி மீது வட்டி போடப்பட்டுள்ளது. இதுதான் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடனில் கொண்டு போய்விட்டுள்ளது.
வெப்சைட்: கிட்னியை விற்றுவிட்டால், பெரிய தொகை கிடைக்கும், அதில் கடனை அடைக்கலாம் என்று ஆடிட்டர் கணக்கு போட்டுள்ளார். அதற்கு பிறகுதான் அந்த வெப்சைட்டை கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார்.
AB ரத்த பிரிவு சிறுநீரகத்துக்கு, யாரோ ஒரு கோடீஸ்வரர் தயாராக இருப்பதாகவும், ரூ2 கோடி வரை விலைபேசலாம், அதில் அட்வான்ஸாக 1 கோடியை வாங்கலாம் என்றும் வெப்சைட்காரர்கள் ஆடிட்டருக்கு ஆசை காட்டி உள்ளனர்.. கடைசியில் ஆவணங்கள் சரிபார்ப்பு, வரி பிடித்தங்கள், கட்டணங்கள் என்ற பெயரில், மேலும் 6.2 லட்சத்தை இழந்துள்ளார் ஆடிட்டர்.
சட்டம்: இப்போது சிக்கல் என்னவென்றால், சட்டவிரோதமாக கிட்னியை விற்க முயன்றதில் ஆடிட்டர் மீதும் சட்டம் பாய போகிறதாம்.. எனவே அதுவரை ஆடிட்டர் குறித்த தனிப்பட்ட விவரங்களையும் போலீஸார் ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம்.. ஆக மொத்தம், 2 விதமான சிக்கலில் சிக்கி, நொந்து நூடுல்ஸ ஆகி கொண்டிருக்கிறார், மெத்த படித்த ஆடிட்டர்...!!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications