தலைக்கேறிய உல்லாசம்.. வாசல்ல வந்து நின்ற மனைவி.. எஸ்.பிக்கு பறந்த போன்.. ஏடாகூடமா சிக்கிட்டாரு ஏட்டு
பெங்களூரு: ஏடாகூடமாக சிக்கியிருக்கிறார் ஏட்டு.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது கர்நாடகாவில்,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரின் சிரவாராவில் வசித்து வருபவர் ராஜ் முகமது.. இவருக்கு 38 வயதாகிறது.. இவர் சிரவாரா போலீஸ் ஸ்டேஷனில் ஹெட் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பியாரி பேகம்.. 30 வயதாகிறது.. இவர் தேவதுர்கா போலீஸ் நிலையத்தில், ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

ராஜ் முகமது: ஒரே துறையில் வேலை பார்த்து வரும் இந்த தம்பதி, எப்போதுமே அன்யோன்யமாகவே இருப்பார்களாம்.. ஆனால் கடந்த 4 வருடங்களாகவே, ராஜ் முகமதுவின் நடவடிக்கையில் வித்தியாசம் தென்பட்டுள்ளது.. தன்னுடைய கணவன் முன்புபோல் தன்னிடம் அன்பாக நடந்து கொள்வதில்லையே என்று கவலைக்குள்ளானார் மனைவி..
இதற்கு பிறகுதான், வேறொரு பெண்ணுடன், கணவனுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்தார்.. அந்த காதலிக்காகவே, தன்னை 4 ஆண்டுகளாக கணவர் விலக்கி வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் மனைவி..
இதனால், கணவரின் இந்த செயல் குறித்து, போலீஸ் அதிகாரிகளிடம் மனைவி புகார் தந்தார்.. ஆனால், போலீசார் எதுவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், ராஜ் முகமதுவுக்கு அறிவுரை சொன்னார்கள்.. இதனால் மறுபடியும் மனைவி புகார் தரவும், மறுபடியும் ஏட்டுவை அழைத்து எச்சரித்தனர் போலீஸார்.. 2 முறை வார்னிங் தந்தும் ஏட்டு, தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
உல்லாசம்: இந்நிலையில், சிரவாராவில் வீடு ஒன்றில் காதலியுடன், தன்னடைய கணவர் உல்லாசமாக இருப்பது, மனைவி பியாரி பேகத்துக்கு தெரியவந்தது.. இதனால், நேரடியாகவே அந்த வீட்டுக்கு கிளம்பி சென்றார் பியாரி பேகம்..
அந்த வீட்டிற்குள் தன்னுடைய கணவர் இருப்பதையும் உறுதி செய்து கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மனைவி பியாரி பேகம், வீட்டிற்குள் செல்லாமல், வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, எஸ்பி-க்கு போனை போட்டார்..
விசாரணை: நடந்ததை எல்லாம் சொல்லி முறையிட்டார்.. இதுகுறித்து புகாரையும் தந்தார்.. உடனே அங்கு வந்த சிரவாரா போலீசார், பூட்டை திறந்துக்கொண்ட வீட்டிற்குள் சென்றார்கள்.. டிபார்ட்மென்ட் நபர்களை பார்த்ததுமே ராஜ் முகமதுக்கு தூக்கி வாரிப்போட்டது.. பிறகு போலீசார் ராஜ் முகமதையும், அவரது காதலியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்...!!
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications