Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் ஹைவேஸில்.. அரை நிர்வாண "கோலத்தில்" பெண் குபீர்.. கரெக்ட்டா வந்த ஆட்டோக்காரர்.. ஓ மை கடவுளே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரைநிர்வாண கோலத்துடன், சாலையில் வேகமாக கார் ஓட்டிச்சென்ற இளம்பெண்ணால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

"மார்டன் சிட்டி" பெங்களூருவில் இளம்பெண்கள் போதையில் நடமாடுவது அதிகரித்தபடியே வருகிறது.. இந்த போதையை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.

Who is this Young girl in Bangalore Highway and what did Bengaluru auto driver say about Drunkard woman

சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு கொடுமை நடந்திருந்தது.. அந்த பெண்ணுக்கு 25 வயதுதான் ஆகிறது.. இவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஆவார்.. ஒருநாள் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார்.

புகார்:
தான் மது போதையில் இருந்தபோது, யாரோ சிலர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக புகார் தந்திருந்தார்.. இரவு நேரம் கோரமங்களாவில் உள்ள பப் ஒன்றிற்கு இந்த பெண் சென்றாராம்..

பிறகு, மது போதையில் இரவு 11:30 மணிக்கு அந்த ஓட்டலை விட்டு வெளியே வந்திருக்கிறார்.. அடுத்த ஒரு மணிநேரத்தில் அதாவது 12.30 மணிக்கு ஆடுகோடி என்ற பகுதியில் மயக்க நிலையிலிருந்து கிடந்தாராம்.

குழப்பம்:
இந்த இடத்துக்கு நாம எப்படி வந்தோம் என்று குழம்பி போய்விட்டாராம் அந்த பெண்.. அதனால்தான், கோரமங்களா போலீஸாரிடம் சென்று, தான் மதுபோதையில் இருந்தபோது தன்னை யாரோ சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தன் உடம்பில் காயங்கள் இருப்பதாகவும் புகாரை ஒன்று தந்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

உடனே போலீஸாலும், இரவு 11:30 மணிமுதல் 12:30 வரை, அந்த பெண் சென்ற ஓட்டலுக்கும், அவர் மயக்கம் தெளிந்து எழுந்த இடத்துக்கும் இடையே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால், அந்த பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகவில்லை என்பது தெரியவந்தது.. அவர் சொன்ன குறிப்பிட்ட நேரத்தில், யாருமே அவரது தாக்கவில்லை என்பதும் தெரியவந்தது..

காயங்கள்: அந்த பப்பில் தண்ணி அடித்துவிட்டு, மயக்கம் தெளிந்து எழுந்த இடம் வரை, சுமார் ஒரு மணிநேரம் போதையில் நடந்தே வந்திருக்கிறார்... போதையில் இருந்ததால், நிறைய இடங்களில் கீழே விழுந்து எழுந்து நடந்து சென்றிருக்கிறார்.. அதனால்தான், உடலில் சில காயங்கள் ஏற்பட்டதாக கூறியிருந்தனர்.

இப்படி, தான் பலாத்காரம் செய்யப்பட்டோமா? இல்லையா? என்பதைகூட அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு, இளம்பெண்களை "மதுபோதை" கலாச்சாரம் கண்ணை மறைத்து கொண்டிருக்கிறது. இதோ நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது இதே பெங்களூரில். சஞ்சய் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

மதுபோதை:
இந்த இளம் பெண் ஃபுல்போதையில் இருந்துள்ளார்.. எங்கே சென்று தண்ணி அடித்தார் என்று தெரியவில்லை.. ஆனால், போதை மட்டும் உச்சிக்கு ஏறியிருந்தது.. அரை குறை டிரஸ்ஸை அணிந்து கொண்டிருந்தார்.. அரை நிர்வாண கோலத்திலேயே குடிபோதையில் காரை வேகமாக ஓட்டியும் வந்துள்ளார்..

இந்த பெண்ணின் கார் சாலையில் தாறுமாறாக செல்வதை, வாகன ஓட்டிகள் பார்த்து பதறிவிட்டார்கள்.. அப்போது ரெஜி என்ற ஆட்டோ டிரைவர், இந்த பெண்ணிடம் "காரை பார்த்து ஓட்டி செல்லுங்கள்" என்றார்.

பளார் பளார்: அவ்வளவுதான்.. அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது.. உடனே காரிலிருந்து ஆவேசமாக இறங்கி வந்தார்.. ஆட்டோ டிரைவர் ரெஜியின் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார் பளார் என அறைய ஆரம்பித்தார்... அத்துடன் கெட்ட கெட்ட வார்த்தைகளிலும் ரெஜியை திட்டத்துவங்கினார்.. ஒரு கட்டத்தில், துப்பாக்கியால் சுட்டு பொசுக்கிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதைக்கேட்டதும் ஆட்டோ டிரைவர் ரெஜி வெலவெலத்து போய்விட்டார்.. ஆனால், இந்த பெண்ணின் மிகக்குறைவான அளவில், டிரஸ் அணிந்திருந்ததால், அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு இந்த சம்பவத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்..

வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருத்தருமே இந்த இளம்பெண்ணை தடுக்கவில்லை.. அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் இதை செல்போனில் பதிவு செய்து, சோஷியல்மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.

கடும் கோபம்:
நள்ளிரவில் இப்படி குடித்து விட்டு அட்டகாசம் செய்பவர்கள் மீது, பெங்களூரு நகர காவல் துறை ஆணையர் தயானந்த் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கைகளை விடுக்க துவங்கி உள்ளனர். இந்த வீடியோதான் இணையத்தில் பரபரப்பையும், கடுப்பையும் மாறி மாறி கிளப்பி விட்டு வருகிறது. என்னத்து சொல்றது???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+