பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவியை பெற போட்டா போட்டி.. யாருக்கு கிடைக்க வாய்ப்பு தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் தான் பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் மூத்த தலைவர் ஒருவர் முன்னிலையில் இருக்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் நாளை முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்கிறார். இவர்களுடன் அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த பதவியேற்பு விழா பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மாநிலத்தில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து விவாதிக்க இன்று சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு செய்வது என்பது முடிவு செய்யப்பட உள்ளது. அமைச்சர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர்கள் புதிய இளைய எம்எல்ஏக்கள் வரை லாபி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெங்களூர் என்பது இந்தியாவின் முக்கிய நகராக உள்ளது. இதனால் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவியை பெறுவதில் கடும் போட்டி எழுந்துள்ளது. பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதைய சூழலில் பெங்களூரில் கிருஷ்ணபைரேகவுடா(பேடராயனபுரா), தினேஷ் குண்டுராவ் ( காந்திநகர்), பைரதி சுரேஷ் (ெஹப்பால்), கேஜே ஜார்ஜ் (சர்வக்ஞநகர்), ரிஸ்வான் அர்சத் (சிவாஜிநகர்), என்ஏ ஹாரிஸ் (சாந்திநகர்), கிருஷ்ணப்பா (விஜயநகர்), ப்ரியா கிருஷ்ணா (கோவிந்தராஜ் நகர்), சீனிவாஸ் (புலிகேசிநகர்) ஜமீர் அகமது கான் (சாம்ராஜ்பேட்டை), ராமலிங்க ரெட்டி (பிடிஎம் லேஅவுட்), சிவண்ணா (ஆனேக்கல்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் எப்படியும் 3 முதல் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதில் ஒருவருக்கு தான் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அப்படி பார்த்தால் முதலிடத்தில் ராமலிங்க ரெட்டி உள்ளார். இவர் மூத்த தலைவராக இருப்பதோடு கடந்த 2013-2018 வரை பெங்களூர் பொறுப்பு அமைச்சராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

இதற்கு அடுத்தபடியாக கேஜே ஜார்ஜ், கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்டவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் கேஜே ஜார்ஜ் கடந்த முறை பெங்களூர் நகர அபிவிருத்தி துறையை வைத்திருந்தார். மேலும் ஜமீர் அகமது கான் சித்தராமையாவுடன் நெருக்கமாக இருப்பதால் ஒருவேளை அவருக்கும் பெங்களூர் பொறுப்பு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் கூட அதிக வாய்ப்பு என்பது ராமலிங்க ரெட்டி அல்லது கேஜே ஜார்ஜ் ஆகியோரில் ஒருவருக்கு தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications