கம்பராமாயணம்-சேக்கிழார் கதை! வந்தே மாதரத்தை எழுதியது தாகூராம்.. தொக்காக சிக்கிய பாஜக தலைவர்
பெங்களூர்: கம்பராமாயணத்தை சேக்கிழார்தான் எழுதினார் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது.. எப்படி பேசுபொருளானதோ ஆனதோ! அதேபோல வந்தே மாதரம் பாடலை எழுதியது ரவீந்திரநாத் தாகூர் என்று கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியிருப்பது அம்மாநிலத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அவர் பேசியதாவது, "ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வந்தே மாதரம் பாடலை நாங்கள் சிறு வயதிலிருந்து பாடி வருகிறோம்" என்று கூறினார். செய்தியாளர்கள் உடனே அவரது தவறை திருத்திய நிலையில், "ஆமாம் ஆமாம்.. பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடல்" என்று சுதாரித்துக்கொண்டார்.

வந்தே மாதரம் பாடல் குறித்து காங்கிரஸை, பாஜக கடுமையாக அட்டாக் செய்து வருகிறது. ஆக.15 சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.. குறுக்கீடு செய்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரானது. வீடியோவை வைத்து.. பாத்தீங்களா காங்கிரஸ் தேசிய பாடலை அவமதித்துவிட்டது என்று பாஜக பாயிண்டை பிடித்து விமர்சிக்க தொடங்கியது.
Karnataka BJP MLA Sriramulu saying we all were singing Vande Mataram written by Rabindranath Tagore since childhood.
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) August 21, 2026
Blud doesnt know What Rabindranath Tagore wrote Jana Gana Mana.
It's Bankim Chandra Chatterjee who wrote Vande Mataram. pic.twitter.com/id7GGJgwak
இப்படி இருக்கையில்தான் வந்தே மாதரம் பாடலை எழுதியது ரவீந்திரநாத் தாகூர் என்று பாஜக தலைவர் உருட்டியிருக்கிறார். "யாரு எந்த பாட்டை எழுதினாங்கனு கூட தெரியல.. அதுக்குள்ள அரசியல் செய்ய வந்துட்டாங்க பாருங்க! இதுதாங்க பாஜக" என்று காங்கிரஸ் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது.. கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நினைவுக்கு வருது என தமிழக நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர்.
கம்பராமாயணமோ.. வந்தே மாதரமோ.. சர்ச்சையை கிளப்பாமல் இருக்கும் வரை எதுவும் பிரச்சனையில்லை. இனி வரும் நாட்களிலாவது வந்தே மாதரம் பாடலை யார் எழுதியது.. அந்த பாடலின் முழு அர்த்தம் என்ன? என்பதை பாஜகவினர் படித்துவிட்டு மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
