எடப்பாடி தப்பு பண்ணிட்டாரே.. கர்நாடகாவில் செம வாய்ப்பை மிஸ் செய்த அதிமுக.. இதை பாருங்க.. ஷாக்கிங்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகரில் அதிமுக தனது வேட்பாளரை தேர்தலுக்கு முன் வாபஸ் வாங்கியது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்து இருந்த நிலையில் அங்கே எடப்பாடி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் வாங்கப்பட்டார். தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முதலில் முடிவு செய்தது.

புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அங்கே பாஜகவை ஆதரிக்காமல் தனியாக போட்டியிடும் முடிவை அதிமுக எடுத்து இருந்தது.
இங்கே போட்டியிடுவது அதிமுகவிற்கு அவ்வளவு அவசியம் இல்லை. ஆனாலும் அதிமுக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட முக்கிய காரணங்கள் இருந்தன.
1. வேட்பாளரை களமிறக்க இரட்டை இலை சின்னத்தை கேட்க முடியும்.
2,. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடியும் முன் இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும். அதோடு தேர்தல் ஆணையம் நம்மை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டு இருந்தார்.
எடப்பாடியின் ராஜதந்திர திட்டமாக இது பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னம் அவருக்குத்தான் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.
வாபஸ்: தேர்தலை காரணம் காட்டி ராஜதந்திரமாக சின்னத்தை பெற்ற எடப்பாடி.. அதன்பின் பாஜகவை குளிர்விக்கும் விதமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்று கர்நாடகாவில் வேட்புமனுவையும் வாபஸ் வாங்க வைத்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் பாஜகவுடன் நட்பு பாராட்டும் விதமாக அங்கே வேட்பாளரை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் வாங்கினார். ஆனால் புலிகேசி நகரில் அதிமுக தனது வேட்பாளரை தேர்தலுக்கு முன் வாபஸ் வாங்கியது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அங்கே புலிகேசி நகரில் மக்களுக்கு பாஜகவிற்கு வாக்களிக்கும் விருப்பம் இல்லை. இதனால் பெருமளவில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து உள்ளனர். அக்கட்சியின் அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகித்து வந்தார்.
தற்போது அங்கே காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிவாஸா 1500 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அங்கே ஒருவேளை அதிமுக போட்டியிட்டு இருந்தால், தமிழ்நாடு கட்சி என்பதால் அதிமுகவிற்கு சாதகமாக முடிவு செய்து இருக்கும்.
ஏனென்றால் அங்கே உள்ள தலித் மக்கள் பாஜகவை விரும்பாமல்.. நல்ல வேட்பாளரும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்துள்ளனர். அதிமுக மட்டும் தனியாக போட்டியிட்டு இருந்தால் அங்கே எடப்பாடி தரப்பு கூட வென்று இருக்கும்.

முன்னிலை: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் இவிஎம் வாக்கில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகள் முடிவடைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திர வாக்குகளில் இதுவரை 1 ரவுண்டு வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.ல
பாஜக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 113 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications