Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக பிளானே வேற.. கர்நாடகாவில் டிகே சிவக்குமாருக்கு எதிராக ஆர்.அசோக் போட்டி! காரணம் இதுதான்.. ஓஹோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவில் தற்போதைய அமைச்சர் ஆர் அசோக் நிறுத்தப்பட்டுள்ளார். கனகபுராவில் பாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத நிலையில் அமைச்சர் ஆர் அசோக்கை அங்கு பாஜக களமிறக்கி உள்ளதன் பின்னணியில் உள்ள மாஸ்டர்பிளான் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்ற விபரம் தெரிந்துவிடும்.

இங்கு மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் சார்பில் 166 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆம்ஆத்மி சார்பிலும் 140 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் பட்டியல்: இதற்கிடையே தான் நேற்று பாஜகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. 189 தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டத்தில் ஷிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அங்கேயே களம் இறங்குவார். அதேபோல் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் ஓய்வு அறிவித்தார். இவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் அங்கு அவரது மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறார்.

Why BJP announces Minister R Ashok for kanakapura constituency against DK Shivakumar?, full details

கனகபுராவில் ஆர்.அசோக்: மேலும் நேற்று வெளியான பட்டியலில் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் அசோக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் தற்போது எம்எல்ஏவாக உள்ள பெங்களூர் பத்மநாபநகர் மற்றும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதல்வர் சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவர் தான் முதல்வராக வருவார்கள். இந்நிலையில் தான் கனகபுரா தொகுதியில் அசோக்கை பாஜக களமிறக்கி உள்ளது.

ஒக்கலிகர் ஓட்டு: கர்நாடகாவை பொறுத்தமட்டில் கனகபுரா என்பது டிகே சிவக்குமாரின் கோட்டையாகும். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய தொகுதிகளில் டிகே சிவக்குமார் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இது அவரது சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் டிகே சிவக்குமார் சார்ந்த ஒக்கலிகர் ஓட்டுகள் தான் அதிகம். ஒக்கலிகர் சமுதாயத்தினர் ஜேடிஎஸ் கட்சிக்கு தான் அதிகளவில் ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால் கனகபுராவில் மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால் டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியில் சக்திவாய்ந்த தலைவராக இருப்பதாலும், முதல்வராக அவருக்கு வாய்ப்பு இருக்கும் சூழலாலும் தான் ஒக்கலிகர் இந்த தொகுதியில் ஜேடிஎஸ்ஸை தாண்டி காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை: இந்நிலையில் தான் தற்போது கனகபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு என்பது சுத்தமாக கிடையாது. கடந்த 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அதிகபட்சமாக பெற்ற வாக்குகள் என்றால் 6,273 தான். அதுவும் கடந்த 2018 தேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினி கவுடா தான் பெற்றார். இத்தகைய சூழலில் தான் ஆர்.அசோக் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் பின்னணியில் தான் பாஜக முக்கிய பிளானை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓட்டுகள் பிரிய வாய்ப்பு: அதாவது அமைச்சர் ஆர்.அசோக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். அதேநேரத்தில் இவர் மாநிலம் முழுவதும் அறியப்படும் அரசியல்வாதியாவார். மேலும் பாஜகவில் ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்க முடிவு செய்தால் அதில் இவரது பெயர் முன்னணியில் இருக்கும். இதனால் ஆர்.அசோக் மூலம் பாஜக அதிக ஓட்டுகளை கனகபுராவில் அறுவடை செய்ய முடிவு செய்துள்ளது. இதுதவிர ஜேடிஎஸ் கட்சியும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கும். 3 முக்கிய கட்சிகளும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கும்போது ஓட்டுகள் சிதறலாம். இது பாஜகவுக்கு சாதகமாகும் என அக்கட்சி நம்புகிறது.

Why BJP announces Minister R Ashok for kanakapura constituency against DK Shivakumar?, full details

தொகுதியில் முடக்க திட்டம்: இருப்பினும் டிகே சிவக்குமாரின் கோட்டையை உடைப்பது என்பது பாஜகவுக்கு சற்று சிரமமான ஒன்றாக தான் இருக்கும். இதனால் தான் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகரிலும் போட்டியிடுகிறார். அங்கு அவர் எளிதாக வெற்றி பெறும் நிலையில் கனகபுராவில் டிகே சிவக்குமாருக்கு குடைச்சல் கொடுக்கலாம். அதாவது பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவராக ஆர்.அசோக் இருப்பது காங்கிரசுக்கு செல்லும் ஒக்கலிகர் வாக்குகளை குறைக்கலாம். மேலும் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கனகபுரா தொகுதியில் இணைந்து செயல்பட்டால் அது டிகே சிவக்குமாருக்கு பெரியளவில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் தான் டிகே சிவக்குமாரும் தனது தொகுதி மீது கடந்த முறையை விட கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய நிலையை பாஜக ஏற்படுத்தி உள்ளது. இது டிகே சிவக்குமாருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதாவது கனகபுரா தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, ஆர் அசோக் மூலம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் டிகே சிவக்குமார் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வதை ஓரளவு தடுக்கலாம் பாஜக நம்புகிறது.

2 பேருக்கும் செக்: அதாவது மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு எதிராக லிங்காயத் ஓட்டுகளை குறிவைத்து தற்போதைய அமைச்சர் சோமண்ணாவை பாஜக களமிறக்கி உள்ளது. இதனால் சித்தராமையாவுக்கும் அங்கும் கடும் போட்டி நிலவலாம். இதனால் அவரும் தனது தொகுதியில் கூடுதல் நாட்களை செலவிட வேண்டி இருக்கும். அதேபோல் தான் டிகே சிவக்குமாருக்கு எதிராக ஆர் அசோக்கை பாஜக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸில் 2 முக்கிய தலைவர்களான சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரை தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்த வைத்து பிற இடங்களில் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்து பாஜக லாபமடைய முயன்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+