Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா ட்விஸ்ட்.. வருணாவில் சித்தராமையாவுக்கு எதிர்க்கும் அமைச்சர் சோமண்ணா!பின்னணியில் பாஜக மெகாபிளான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக அமைச்சர் சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். பெங்களூர் கோவிந்தராஜ் நகர் எம்எல்ஏவாக உள்ள சோமண்ணாவை பாஜக வருணாவில் சித்தராமையாவுக்கு எதிராக களமிறக்கி இருப்பதன் பின்னணியில் அக்கட்சி மெகாபிளானை போட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்பட பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

கர்நாடகாவில் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் தனிமெஜாரிட்டி பெற 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் எந்த கட்சிக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்காது என கூறப்படுகிறது.

Why BJP fields Minister Sommanna for Varuna constituency Against Former CM Siddaramaiah?, full details here

பாஜக வேட்பாளர்: இதற்கிடையே தான் மேஜிக் நம்பரான 113 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் 166 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் நிலவிய கடும் குழப்பத்தால் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் நேற்று பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி 189 தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2 தொகுதிகள் ஒதுக்கீடு: அதன்படி முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ஷிக்கானில் போட்டியிடுகிறார். எடியூரப்பா தேர்தல் அரசியலில் ஓய்வு அறிவித்த நிலையில் அவரது மகன் விஜயேந்திரா, சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். மாறாக தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் அசோக் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா ஆகியோருக்கு 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அசோக் தற்போது எம்எல்ஏவாக உள்ள பெங்களூர் பத்மநாபநகர் மற்றும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

வருணாவில் சோமண்ணா: அதேபோல் அமைச்சர் சோமண்ணா தற்போது எம்எல்ஏவாக உள்ள பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மாறாக இவருக்கு மைசூர் மாவட்டம் வருணா மற்றும் சாம்ராஜ் நகர் சட்டசபை தொகுதிகளில் பாஜக களமிறக்கி உள்ளது. இதில் மைசூர் மாவட்டம் வருணாவில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா போட்டியிடுகிறார்.

Why BJP fields Minister Sommanna for Varuna constituency Against Former CM Siddaramaiah?, full details here

களமிறக்கியது ஏன்: இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு எதிராக அமைச்சர் சோமண்ணாவை பாஜக களமிறக்கியது ஏன்? என்பது தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா முதன்மையாக உள்ளார். இதனால் அவரை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்துள்ளது.

சிக்கலை ஏற்படுத்த முடிவு: மேலும் சித்தராமையா முதல்வர் பதவியை குறிவைத்து தான் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடுகிறார். 2008, 2013ல் இந்த தொகுதிகளில் சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில் 2018 ல் மகன் யதீந்திராவுக்காக விட்டு கொடுத்து பாதாமி, சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் போட்டியில் பாதாமியில் வெற்றி பெற்றார். ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்க உள்ளதால் மகன் யதீந்திரா போட்டியிடாமல் தனது தொகுதியை தந்தை சித்தராமையாவுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது.

சோமண்ணாவை நிறுத்தியது ஏன்: அதாவது சித்தராமையாவை தோற்கடிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதனால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவு செய்தது. இதனால் தான் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை அங்கு களமிறக்க வியூகம் வகுத்தது. ஆனால் எடியூரப்பா அதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் தான் தற்போது சோமண்ணா போட்டியிட்டுள்ளார். பாஜகவில் பல கட்சி தலைவர்கள் இருக்கும்போது சோமண்ணாவை மட்டும் ஏன்? பாஜக அங்கு களமிறக்கியது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதன் பின்னணியில் தான் சாதிய கணக்கீடு உள்ளது.

சாதிய கணக்கீடு: அதாவது வருணா தொகுதியை பொறுத்தமட்டில் லிங்காயத் சமுதாயத்துக்கு 55 ஆயிரம் ஓட்டுகள், ஒக்கலிகர் சமுதாயத்துக்கு 12 ஆயிரம் ஓட்டுகள், குருபா சமுதாயத்துக்கு 35 ஆயிரம் ஓட்டுகள், எஸ்சி சமுதாயத்துக்கு 43 ஆயிரம் ஓட்டுகள், எஸ்டி சமுதாயத்துக்கு 23 ஆயிரம் ஓட்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 12 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இதில் எஸ்சி, எஸ்டி மற்றும் குருபா ஓட்டுகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் கிடைக்கும். மாறாக லிங்காயத் சமுதாய ஓட்டுகள் பாஜகவுக்கும், ஒக்கலிகர் ஜேடிஎஸ் கட்சிக்கும் அதிகமாக கிடைக்கும்.

காரணம் என்ன: மாறாக வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் உள்ள லிங்காயத் ஓட்டுகளை குறிவைத்து தான் பாஜக அங்கு வியூகம் வகுத்துள்ளது. சித்தராமையாவுக்கு டப் கொடுக்கும் வகையில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறங்காத நிலையில் அவருக்கு நிகராக அமைச்சர் சோமண்ணா கோதாவில் குதித்துள்ளார். சோமண்ணாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதோடு, அனைவராலும் ஓரளவு அறியப்பட்ட நபராக உள்ளார். இதனால் சோமண்ணாவை வருணாவில் பாஜக களமிறக்கி உள்ளது. இதன்மூலம் 55 ஆயிரம் லிங்காயத் ஓட்டுகளை அவரால் பெற முடியும். அதோடு, பிற சமுதாய ஓட்டுகளையும் ஓரளவு பாஜகவுக்கு பெற்று கொடுக்க முடியும். இதனால் வருணா தொகுதிகளில் சித்தராமையாவின் வெற்றி என்பது எளிமையாக இருக்காது என பாஜக கணக்கீட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு எப்படி?: வருணா என்பது சித்தராமையாவின் சொந்த தொகுதியாகும். மேலும் எஸ்சி, எஸ்டி, அவர் சார்ந்த குருபா சமுதாயம் மற்றும் சொந்தஊர் பலம் உள்ளிட்டவை சித்தராமையாவுக்கு பலமாக இருக்கிறது. இதனால் அவரை சோமண்ணாவால் வீழ்த்த முடியாவிட்டாலும் கடுமையான சவால் அளிக்க முடியும். இதனால் வருணா தொகுதியில் சித்தராமையா கூடுதலாக நேரம் செலவிட வேண்டி இருக்கும். இதனால் அவரால் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் பிரசாரம் செய்வதை தடுக்க முடியும். ஏனென்றால் சித்தராமையாவுக்கு அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. இவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். இது தான் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படும் நிலையில் வருணாவில் சோமண்ணாவை களமிறக்கியதன் மூலம் சித்தராமையாவை தனது தொகுதியில் அதிக நாட்கள் முடக்கலாம். இதனால் தான் சோமண்ணாவை பாஜக அங்கு களமிறக்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+