கர்நாடக தேர்தல் வெற்றியில் மகிழ்ச்சி இல்லையாம்.. டிகே சிவக்குமார் சொல்ல என்ன காரணம் தெரியுமா
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும், இந்த வெற்றியில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அங்கு ஆட்சியில் இருந்த பாஜகவைக் காங்கிரஸ் கட்சி வீழ்த்தியது. இதன் மூலம் தென்னிந்தியாவில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்தையும் பாஜக இழந்தது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் தேர்வில் சற்றே குழப்பம் இருந்தாலும், பேச்சுவார்த்தை மூலம் அது சரி செய்யப்பட்டது.

கர்நாடகா: அம்மாநில முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர். முதல்வர் பதவியை விட்டுத் தர முதலில் டிகே சிவக்குமார் ஒப்புக் கொள்ளவில்லை. 4 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதில் உடன்பாடு ஏற்பட்டது. துணை முதல்வர் பதவிக்கு டிகே சிவக்குமார் ஒப்புக் கொண்டார். இதனிடையே கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் உடன் நடந்த சந்திப்பில் பேசிய டிகே சிவக்குமார், 135 தொகுதிகளில் வென்றது போதாது எனத் தெரிவித்தார். மேலும், அடுத்து வரும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகிழ்ச்சி இல்லை: அது குறித்து அவர் கூறுகையில், "உங்களிடம் நான் ஒர் உண்மையை சொல்கிறேன். சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 135 இடங்களில் வென்றது உண்மையில் எனக்குத் திருப்தி இல்லை. நமது கவனம் சரியான இடத்தில் இருக்க வேண்டும்... அடுத்து வரும் மக்களவை தேர்தல்தான் அது.. இனி வரும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும், நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
இது வெறும் ஆரம்பம் தான்.. இந்த ஒரு வெற்றியைப் பார்த்து சோம்பேறியாக இருக்கக் கூடாது. அடுத்து வரும் மக்களவை தேர்தலில் இதை விட பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை நாம் இப்போதே ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.. இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இதனால் அங்கே அதிகப்படியான இடங்களில் வெல்ல இரு கட்சிகளும் தீவிரமாக முயலும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் பெங்களூரு ரூரல் தொகுதியிலும், ஜேடிஎஸ் ஹாசனிலும் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை சட்டசபைத் தேர்தலில் லிங்காயத் மற்றும் அஹிண்டா எனப்படும் சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் வாக்களித்தன. இவர்களின் ஆதரவு காங்கிரஸ் பக்கம் இருப்பதால் அதிக இடங்களில் வெல்லும் என்றே காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருக்கிறது.
அதாவது சட்டசபை தேர்தல் வெற்றி முக்கியம் தான் என்றாலும் இப்போது அடுத்து காங்கிரஸ் இலக்காக மக்களவை தேர்தல் இருக்கிறது. கர்நாடகாவில் மொத்தம் 25 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதே காங்கிரஸின் இப்போதைய இலக்காக இருக்கிறது. இதன் காரணமாகவே டிகே சிவக்குமார் இந்த வெற்றியில் தனக்கு முழு மகிழ்ச்சி இல்லை என கூறியிருந்தார்.
பாஜக ஆதரவாளர்: லிங்காயத்துகள் எப்போதும் பாஜகவின் ஆதரவாளராகவே அறியப்படுகிறார்கள். இருப்பினும், தங்களது தலைவரான எடியூரப்பாவை பாஜக ஓரம்கட்டியதால் லிங்காயத்துகளும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவால் 65 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது வெளியான பல கருத்துக்கணிப்புகளை விடவும் குறைவாகும். மேலும் 36% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றிருந்தது.
இந்தத் தோல்விக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற நிலையில், தோல்வி குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications