ட்விஸ்ட்! நாளை கர்நாடகா தேர்தல் ரிசல்ட்! இன்று தமிழ்நாடு பறந்து வந்த டிகே சிவக்குமார்! அப்போ அதுதானா
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் திடீரென தமிழ்நாடு வந்துள்ளார். அவரின் இந்த திடீர் தமிழ்நாடு வருகை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
அங்கே இதுவரை வந்துள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறும் என்றும் கூட குறிப்பிட்டு உள்ளன.
டிகே சிவக்குமார்
இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அங்கே யார் முதல்வர் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரில் யார் முதல்வர் என்று கேள்வி நிலவி வருகிறது.
டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.
அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், நிர்வாகிகள் பொரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.
இவர்களில் யார் முதல்வராக போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் சப்போர்ட் சித்தராமையாவிற்கும், தொண்டர்கள் சப்போர்ட் டிகே சிவக்குமாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் ஆவதற்கு இரண்டு பேருமே தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். முக்கியமாக டிகே சிவக்குமார் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம்.
இப்போதும் கூட ட்விட்டரில் டிகே சிவக்குமார் பார் சிஎம் #dksivakumar4cm என்ற டேக் வைரலாகி வருகிறது. இதெல்லாம் அவரின் முதல்வர் ஆசையை காட்டுகிறது.
இந்த நிலையில்தான் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் திடீரென தமிழ்நாடு வந்துள்ளார். அவரின் இந்த திடீர் தமிழ்நாடு வருகை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தீவிர கடவுள் பக்தரான இவர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும், முதல்வர் பதவி வேண்டியும் இந்த தரிசனத்தை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கர்நாடகா:
கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன.
கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications