ஓடி ஓடி உழைத்தாரே.. டிகே சிவக்குமார் அவ்வளவு செய்தும்.. சித்தராமையாதான் முதல்வர்? ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்ற நிலையில் அங்கே டிகே சிவக்குமார் - சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கான மோதல் நடந்து வருகிறது. இதில் சித்தராமையாவிற்குத்தான் முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பிற்கும், பரபரப்பிற்கும் இடையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பொம்மை அங்கே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.
மோதல்?: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று இன்று காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவிக்கு அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருகிறது.
சிவக்குமார் அங்கே, தேர்தல் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்தார்.
5 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைக்க காரணமாக இருந்தார்.
மத்திய பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் கூட காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்க காரணமாக இருந்தார்.
ஒக்கலிகா பிரிவினர் இந்த முறை எதிர்பார்க்காத அளவிற்கு சிவகுமாருக்கு வாக்களித்துள்ளனர். இதற்கு காரணம் சிவக்குமார்தான்.

அவரின் பிரச்சாரம்தான் ஒக்கலிகா பிரிவினர் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஆதரவு தர காரணம்.
அவரின் அதிரடி பிரச்சார வியூகங்கள், சௌமியா ரெட்டிக்கா ஜெய நகரில் இரவில் கூட வாக்கெடுப்பு நடத்தும் இடத்திற்கு சென்றது என்று சிவக்குமார் மிகச்சிறப்பான "வேலைக்காரராக" திகழ்ந்தார்.
ஆனால் இவருக்கு பதிலாக சித்தராமையாதான் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்மிடம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
டெல்லி சித்தராமையாவை தேர்வு செய்ய காரணங்கள் உள்ளன.
காரணம் என்ன?: 1. டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது.
2. அங்கே எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வென்றது சித்தராமையாவா அல்லது டிகே சிவக்குமாரா என்பது ரகசியமாக உள்ளது. இதன் முடிவுகள் நேற்று சோனியா காந்தி - கார்கேவிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று அதில் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

3. இந்த வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் 90 சதவிகிதம் பேர் டி கே சிவக்குமாருக்குத்தான் ஆதரவு என்று கூறுகின்றனர்.
4. வாக்களித்தவர்கள் ரீதியாக ஒக்கலிகா என்னவோ டிகே சிவகுமாரை பார்த்து வாக்களித்தாலும், இஸ்லாமியர்கள், லிங்காயத்துகள், தலித்துகள் பெரும்பாலும் சித்தராமையா - கார்கேவை பார்த்தே வாக்களித்தனர்.
5. டிகே சிவக்குமார் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர் இல்லை. ஆனால் சித்தராமையா தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியை உடைக்கும் குணம் கொண்டவர். அவருக்கு இருக்கும் மைனாரிட்டி சப்போர்ட் மிகப்பெரியது. அதேபோல் அவரின் குருபா ஜாதிதான் அங்கே மூன்றாவது பெரிய ஜாதி. இதனால் கண்டிப்பாக ஒரு 30 எம்எல்ஏக்களை கூட்டிக்கொண்டு போய் சித்தராமையா கட்சியை உடைப்பார். இதை காங்கிரஸ் விரும்பாது. ஏன் டிகே சிவக்குமாரும் விரும்ப மாட்டார் .

6. உண்மையில் டிகே சிவகுமாரே முதல்வர் பதவிக்கு திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பெரிய இரண்டு அமைச்சரவையை வாங்கவே இப்படி செய்கிறார். அவருக்கு பிஸ்னஸ் பார்க்கவே நேரம் இருக்கும். அதில் பல சலுகைகளை எதிர்பார்ப்பார். அதற்காகவே பிரஷர் கொடுப்பார் என்றும் கூறுகிறார்கள்.
7. அதனால் சித்தராமையாதான் அடுத்த முதல்வர். இதுபோக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சித்தராமையா முதல்வர். துணை முதல்வர்கள் 3ல் ஒருவர் வொக்கலிகா, ஒருவர் முஸ்லீம், ஒருவர் லிங்காயத்து துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 2 துணை முதல்வர் டிகே சிவக்குமார் சொல்லும் நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications