முடா விவகாரம்.. சித்தராமையாவின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்
பெங்களூர்: முடா அமைப்பு சட்டவிரோதமாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டு மனைகளை ஒதுக்கியதாகச் சர்ச்சை வெடித்தது. இது குறித்து விசாரிக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க கோரி சித்தராமையா தொடர்ந்த வழக்கைக் கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முடா வீட்டுமனை ஒதுக்கீடு மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இது இப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் அனுமதிக்குத் தடை கோரிய சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதிமன்றம் ஏன் சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன புகார்: கர்நாடக முதல்வரான சித்தராமையாவின் மனைவிக்கு முடா சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகளை ஒதுக்கியுள்ளது என்பதே புகாராகும். இந்த விவகாரத்தில் பலரும் சித்தராமையா மீது புகார் அளித்திருந்தனர். இதன் மூலம் சித்தராமையாவின் குடும்பத்தினர் சுமார் 56 கோடி ரூபாய் பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கு ஏன்: ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 218ன் கீழ் தனக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அளித்த அனுமதியை எதிர்த்து சித்தராமையா வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக ஐகோர்ட் வழக்கை டிஸ்மிஸ் செய்துள்ளது.
ஆளுநர் அனுமதிக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த முடா நில பரிவர்த்தனையில் சித்தராமையாவுக்கு பங்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளதாக நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறினார்.
சித்தராமையா மனு டிஸ்மிஸ் ஏன்: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி மேலும் கூறுகையில், "இழப்பீட்டுத் தொகை ரூ. 3.56 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அது எப்படி திடீரென ரூ.56 கோடியாக மாறியது. இதன் பின்னணியில் யாரும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வது கடினம்... முதல்வரின் குடும்பத்திற்கு ஆதரவாக விதி வளைக்கப்பட்டதா என்பதை விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
சித்தராமையா தனது மனுவில், ஆளுநரின் அனுமதி விதிகளை மீறுவதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163வது பிரிவுக்கு முரணானது என்றும் சித்தராமையா தரப்பு வாதங்களை முன்வைத்தது. இது குறித்தும் நீதிபதி கூறுகையில், "ஒரு மாநில அரசின் கேபினட் என்பது முதல்வரால் பரிந்துரை செய்யப்படுகிறது.
எனவே, தங்களை நியமித்த முதல்வருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும் போது அவர்கள் பக்கச்சார்பு இல்லாமல் இருப்பார்கள் என்பது கடினம். மனுவில் கூறப்பட்டுள்ளவை குறித்து விசாரிக்க வேண்டும். இந்த பரிவர்த்தனையால் பயனடைந்த ஒரே குடும்பம் மனுதாரர் (முதல்வர் சித்தராமையா) உடையது மட்டுமே. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி நாகபிரசன்னா கூறினார்.
பிரச்சினை என்ன: அதாவது சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு, முடா கையகப்படுத்திய நிலத்தை விட அதிக சொத்து மதிப்புள்ள இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதே பிரச்சினையின் மைய கரு. மைசூருவில் உள்ள ஒரு முக்கிய சந்தைப் பகுதியில் அவருக்கு இழப்பீட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்தே விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications