மெட்டு சரியில்லை.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிறுத்தப்பட்டது குறித்து அண்ணாமலை சொன்ன புது விளக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கப்பட்ட போதே குறுக்கிட்ட முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் நடைபெற்ற போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேடையிலேயே நின்று கொண்டிருந்தார். ஆனால், அண்ணாமலை இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழக அரசியல் தலைவர்களும் அண்ணாமலை எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்ததற்கு விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து அண்ணாமலை விளக்கள் அளித்துள்ளார். அண்ணாமலை கூறுகையில், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் மெட்டு சரியில்லாமல் அதை அவமதிப்பது போல் இருந்ததால் நிறுத்தினோம்" என்று கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் களத்தை பொறுத்தவரை பாஜகவின் வெற்றி உறுதியாகி முதல் முறையாக 110 சீட்டை கடந்து 130 சீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.. காரணம் மக்களின் ஆதரவு.. 3 அரை ஆண்டுகளாக பாஜக ஆட்சி.. 9 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் பார்க்கிறார்கள். டபுள் என்ஜின் அரசு. அதனுடைய செயல்பாட்டை பார்க்கிறார்கள், இதனால் மே 10 ம் தேதி நிச்சயமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் பெரும் ஆதரவை மக்கள் கொடுப்பார்கள்.
கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா அனைத்து சமுதாய மக்களையும் தேர்தல் பரப்புரைக்காக வரவைத்து இருந்தார். அப்போது கர்நாடக மாநில பாடலை போட சொல்லியிருந்தபோது அங்கிருந்த ஆபரேட்டர் அந்த பாடலை போடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டை போட்டுவிட்டார். அந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் கூட சரியான பாடல் இல்லை.
அதனுடைய டியூன், மெட்டு கிட்டத்தட்ட 30 வினாடிக்கு பின்னர் அந்த பாடல் நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பது போலத்தான் இருந்தது. இங்கே ஒரு பாடலை போடவேண்டும் என்றால் முதலில் அந்த மாநில பாடலை போடுவது தான் நியதி. தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் நாம் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தான் போடவேண்டும். அது தான் நியது. இதைத்தான் ஈஸ்வரப்பா செய்திருந்தார்.
தனிப்பட்ட முறையில் எனக்கும் எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பொதுவான எதிரி திமுக தான். சுமூகமாக நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து இணைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம். குறிப்பாக இந்த தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்கள். எங்களுக்கு பொதுவான எதிரி திமுக. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பொதுவான எதிரி திமுக தான். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications