பெங்களூரில் தாம்பத்தியத்தில் ஈடுபட ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி.. புகார் தந்த ஐடி ஊழியருக்கு ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூர் வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஸ்ரீநாத் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), என்பவர் தனது மனைவி மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தனது மனைவி, தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்பதாக கூறி ஆடிப்போக வைத்துள்ளார். மேலும் விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார் என்றும், மனைவியின் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
தம்பதியர் இடையே ஏற்படும் மனஸ்தாபங்கள் மற்றும் விட்டுக்கொடுத்து செல்வதில் ஏற்படும் ஈகோ கடைசியில் அவர்களுக்கு இடையே பெரிய பிரிவினை ஏற்படுத்துகிறது. இதில் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து சென்றால் பிரச்சனை இல்லை. மாறாக ஒருவருக்கு ஒருவர் பணம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது தாம்பத்திய உறவை வெறுக்கும் நோக்கிலோ அல்லது கடைசி வரை அடிமையாகஇருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ சிக்கலில் முடிகிறது. அதேநேரம் அண்மை காலங்களில் ஆண்கள், மனைவியால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீநாத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இன்ஜினியரான இவர், தனது மனைவி மீது வயாலிகாவல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த, "எனக்கும், இந்துஸ்ரீக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவே இல்லை. குழந்தை பெற்றுக்கொண்டால், தனது அழகு கெட்டுப் போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று இந்துஸ்ரீ கூறுகிறார்.
அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்டு வருகிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று புகார் மனுவில் கூறினார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீநாத் மீது அதே காவல் நிலையத்தில் இந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீநாத் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் கூறினார். பின்னர் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களிடம் இந்துஸ்ரீ கூறுகையில், "என் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் துளியும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார்.
குழந்தை பெற்றுக்கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்று நினைத்து குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்து வந்தேன் என்றார். கணவன்- மனைவி இருவரின் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications