திருமண நாள் பரிசு எங்கே? ஆத்திரமடைந்த மனைவி.. கணவனுக்கு கத்தி குத்து! அலறிய பெங்களூர்
பெங்களூர்: கர்நாடகாவில் திருமணநாள் தினத்தில், தனக்கு எந்த பரிசும் கொடுக்கவில்லை என மனைவி தனது கணவனை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. கணவன், மனைவி இருவரும் பெங்களூரின் பெலந்தூர் பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது சண்டைகள் உருவாகியிருக்கின்றன. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் படுத்தியதால் இந்த சண்டை பெரிய அளவில் வெடிக்கவில்லை. ஆனால் கடந்த 1ம் தேதி எதிர்பாராத வகையில், இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை வன்முறையாக வெடித்திருக்கிறது.

அதாவது இவர்களுக்கு திருமணமாகி கடந்த 1ம் தேதியுடன் ஓராண்டு ஆகிறது. எனவே திருமண நாள் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மனைவி எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கணவர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. காரணம் கணவரின் தாத்தா திருமண தினத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் உயிரிழந்திருக்கிறார். எனவே துக்கத்தில் இருந்த அவர், திருமண நாளை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.
இதுதான் சண்டைக்கான காரணம். அன்றைய தினம் இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் உருவாகியிருக்கிறது. திருமண நாளை பெரியதாக கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம், ஒரு கிஃப்டாவது வாங்கி கொடுத்திருக்கலாம் என மனைவி கேட்க, கணவன் ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்த.. வாக்குவாதம் சண்டையாக முற்றியிருக்கிறது. வழக்கம்போல அக்கம் பக்கத்தினர் தலையிட்டு, பிரச்னைக்கு சமாதானம் பேசி முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
அன்று இரவு சுமார் 1 மணி இருக்கையில் இவர்கள் வீட்டிலிருந்து பெரிய அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. கணவர், ரத்தம் சொட்ட சொட்ட கையை பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெலந்தூர் காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருமண நாளுக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்காததால், கணவரின் கையில் மனைவி கத்தி கொண்டு குத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குடும்ப வன்முறைகள் வளர்ந்து வரும் காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், அதனை நாம் இயல்பாக கடந்து சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது என மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications