பெங்களூரில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த பெண்! மறுநாளே ட்விஸ்ட்.. காலில் விழுந்த ஜோடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் பெல்லந்தூரில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை பீகாரை சேர்ந்த கர்ப்பிணி பெண் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மறுநாள் கர்ப்பிணி பெண் தனது கணவருடன் வந்து ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் கன்னடர்கள் மீது மிகுந்து கவுரவம் இருப்பதாக அந்த பெண் பேசும் வீடியோவும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல்லந்தூரில் பீகாரை சேர்ந்த 28 வயது பெண் கணவருடன் வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுவிட்டு வீட்டுக்கு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டி மீது ஆட்டோ டிரைவர் லேசாக மோதிவிட்டார்.

woman-in-bangalore-allegedly-assaulting-an-auto-rickshaw-driver-apologising-over-his-behaviour

செருப்பால் தாக்கிய பெண்

லோகேஷ் என்பவர் அந்த ஆட்டோவை ஓட்டி வந்தார். இதனால் கடும் கோபடமைந்த கர்ப்பிணி பெண், ஆட்டோ டிரைவர் லோகேஷை செருப்பால் சராமாரியாக அடித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் மீது பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

காலில் விழுந்து மன்னிப்பு

இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண் நேற்று முன் தினம் பெல்லந்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணை கைது செய்யாமல் போலீஸ் நிலைய ஜாமீன் வழங்கி வீட்டுக்கு அனுப்பினர். இதனால் கடும் ஆத்திரமடைந்த லோகேஷ், பெண் மீது நான் கொடுத்த புகாரை திரும்ப பெற மாட்டேன். தன்னை செருப்பால் தாக்கியதாலும், அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதாலும் எனக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று அந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் லோகேஷை வீட்டுக்கு வந்து சந்தித்தனர். மேலும் அந்த தம்பதியினர் லோகேஷின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். முதலில் அந்த தம்பதி ஆங்கிலத்தில் பேசினர். பின்னர் கன்னடத்தில் சொல்லி மன்னிப்பு கேட்டனர். கன்னட அமைப்பினர் கூறியதை அப்படியே அவர்கள் கூறினார். மேலும், பெங்களூரில் இருந்தால், கன்னட மொழி கற்க வேண்டும் என்று தம்பதியிடம் கூறினர்.

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

woman-in-bangalore-allegedly-assaulting-an-auto-rickshaw-driver-apologising-over-his-behaviour

அந்த கர்ப்பிணி பெண் கூறுகையில், "நாங்கள் நீண்ட நாட்களாக பெங்களூரில் வசித்து வருகிறோம். பெங்களூர் மக்களை நாங்கள் நேசிக்கிறோம். இந்த ஊர் மீது எங்களுக்கு எந்த ஒரு அதிருப்தியும் இல்லை. குறிப்பாக கன்னடர்கள் மீது மிகுந்த கவுரவம் உள்ளது. நான் இப்போது கர்ப்பமாக இருக்கின்றதால், எனது ஸ்கூட்டி மீது ஆட்டோ மோதியதும் கடுமையாக ஆத்திரமடைந்தேன். இதனால் அவ்வாறு செய்துவிட்டேன். இதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் அங்கு சென்றது, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆட்டோ டிரைவரை தாக்கிய கர்ப்பிணி பெண்ணை கண்டித்து பெங்களூர் சுதந்திர பூங்காவில் ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+