6ஆவது புருஷன்தான் வேணும்.. அடம்பிடித்த பிரியா.. கண்ணைக் கசக்கிய 5 கணவர்கள்.. வடிவேல் பாணி அதிரடி!
பெங்களூர்: 5 கணவர்களை விட்டுவிட்டு 6ஆவதாக ஒரு இளைஞரை காதலித்த 38 வயது பெண் ஒருவர் அவரையே திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு சிக்மக்ளூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிக்மக்ளூர் மாவட்டம், கம்பினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (22). இவர் ஒரு பெண்ணுடன் அதே பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த காவலர்களிடம் நாங்கள் இருவரும் காதலர்கள்.
எங்கள் காதலுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருக்கிறது. தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்தார்.

காதலித்து திருமணம்
அப்போது காவல் நிலையத்திற்கு 5 பேர் வந்தார்கள். அப்போது போலீஸாரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பெரிய குற்றமா, சின்னஞ்சிறுசுகள் ஏதோ தெரியாமல் செஞ்சிட்டாங்க. அவங்களை வாழ விடுங்கள் என அந்த 5 பேரிடமும் அறிவுறுத்தினர். அப்போது அந்த 5 பேரும் சேர்ந்து சார் சந்துரு கூட்டிட்டு வந்தது எங்கள் மனைவி என கூறினர்.

பெங்களூர்
இதை கேட்டதும் போலீஸாருக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சி. பின்னர் அந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் 5 பேரும் சிக்மக்ளூர், பெங்களூரைச் சேர்ந்தவர்கள். அவர்களது பெயர் பசவராஜ், பெங்களூரைச் சேர்ந்தவர் கிரண், ரமேஷ் , துக்காராம், மற்றும் இன்னொரு இளைஞர் ஒருவர் ஆவார்.

சில காலம் குடும்பம்
அவர்கள் 5 பேரையும் அந்த பெண் காதலித்து திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்டாராம். அதில் 2 பேருக்கு அவர் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்தபெண்ணின் பெயர் பிரியா என்றும் அவருக்கு 38 வயது ஆகிறது என்றும் தெரிவித்தார்.

காதல் திருமணம்
மேலும் மேற்கண்ட 5 பேரையும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும் ஒப்புக் கொண்டார். சில காலம் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவானதையும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் சந்துருவை தான் தீவிரமாக காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தான் சந்துருவுடன் மட்டுமே வாழ விரும்புவதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

கள்ளக்காதல்
இது காதல் இல்லை என்றும் கள்ளக்காதல் என்றும் சந்துருவுக்கு போலீஸார் அறிவுறுத்தினார்கள். ஆயினும் தனக்கு பிரியாதான் வேண்டும் என சந்துருவும் அடம்பிடித்தார். ஆனால் பிரியாதான் வேண்டும் என அந்த 5 கணவர்களும் போலீஸ் நிலையத்தில் அழுது புரண்டனர். அந்த பெண்ணுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.

பிரியா மீது வழக்கு
சந்துருவுக்கு அம்மா, அப்பா இல்லை. அக்காவின் பராமரிப்பில் இருக்கிறார். அவருடைய அக்காவை காவல் நிலையத்திற்கு அழைத்த போலீஸார் தம்பிக்கு அறிவுரை வழங்குமாறு கூறினார். ஆனால் அக்காவின் அறிவுரையையும் சந்துரு ஏற்கவில்லை. இதையடுத்து 5 கணவர்களையும் விவாகரத்து செய்யாமல் சந்துருவை திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் பிரியா மீது வழக்கு பதிவு செய்தனர்.

திடுக்கிட்ட போலீஸ்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல் இருந்தது. அந்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வடிவேலுவுடன் இது போல் ஒரு காதல் ஜோடி தஞ்சமடையும். அவரும் அவர்களுக்கு திருமணம் நடத்தி விடுவார். பின்னர் 5 பேர் ஸ்டேஷனுக்கு வந்து அந்த பெண் தனது மனைவி என கூறுவார்கள். அப்போது வடிவேல் திடுக்கிட்டது போல் இந்த சிக்மக்ளூர் போலீஸார் திடுக்கிட்டனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications