Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியேட்டரில் தெரிந்த வெளிச்சம்.. லேப்டாப்பை திறந்து பணி செய்த பெண்.. Work From Home-ன் பரிதாப நிலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: Work From Home-ல் இருக்கும் நபர்கள் சுபநிகழ்ச்சிகளிலும், பஸ், ரயில்களில் பயணிக்கும்போதும் வேலை செய்வதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் பெங்களூரில் ஒரு பெண் தியேட்டரில் வைத்து பணி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

கொரோனா சமயத்தில் பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆப்ஷனை வழங்கியது. இப்போது பல நிறுவனங்களும் அதனை திரும்ப பெற்றுவிட்டன. பெருரம்பாலான நிறுவனவனங்கள் தங்களின் பணியாளர்களை அலுவலகம் வரவழைத்து வேலை செய்ய வைத்துள்ளன.

woman-working-on-laptop-in-theater-in-bengaluru

இருப்பினும் சில நிறுவனங்கள் மட்டுமே பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. சில நிறுவனங்கள் Hybrid முறையில் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் Work From Home ஆப்ஷனை பலரும் வேறு விதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தியேட்டரில் வேலை செய்த பெண்

வெறுமனே வீட்டில் இருந்து பணி செய்வது மட்டுமின்றி பஸ், ரயில் உள்ளிட்ட பயணங்களில் கூட Work From Home ஆப்ஷனை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் ரயிலில் பயணித்தபடி வேலை செய்து தனது டீம் லீடிடம் சிக்கினார். அந்த வரிசையில் தற்போது பெண் ஒருவர் சினிமா தியேட்டரில் வைத்து வேலை பார்த்துள்ளார்.

‛ரெடிட்’ தளத்தில் பரவும் போட்டோ

இதுதொடர்பான போட்டோ இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த போட்டோவை r/bangalore என்ற நபர் தனது ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் பெண் ஒருவர் சினிமா தியேட்டரில் பணி செய்கிறார்.. என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ பெங்களூரில் மட்டும் தான்.. லோகா திரைப்படம் பார்க்க போனேன்.

அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் தனது லேப்டாப்பை திறந்து வேலை பார்க்க தொடங்கினார். உண்மையில் இங்குள்ள பணி கலாசாரம் எவ்வளவு குழப்பமாக உள்ளது என்பதை காட்டும் வகையில் இது உள்ளது. அலுவலகத்தின் பணி அழுத்தம் இல்லாமல் 2 மணிநேரம் கூட ஒருவரால் இருக்க முடியாது. இங்கு எங்கு வேலை - வாழ்க்கை என்ற சமநிலை உள்ளது?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

குமுறும் ஊழியர்கள்

இருப்பினும் அந்த பெண் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையிலான பணியின்போது தியேட்டருக்கு வந்து வேலை செய்தாரா? இல்லாவிட்டால் பணி நேரம் முடிந்தும் அலுவலக மேலதிகாரி சொல்ல வேறு வழியின்றி பணி செய்தாரா? அல்லது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

அவரது இந்த பதிவு அதிக கவனம் பெற்றது. பலரும் இந்த பதிவுக்கு கமெண்ட்டுகள் செய்து வருகின்றனர். ஒரு சிலர் நம் நாட்டில் இருக்கும் அலுவலகங்களை திட்டி தீர்த்துள்ளனர். ஒருவர், ‛‛நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டீமுடன் பணியாற்ற இருந்தால் நம் நாட்டின் வேலை நேரத்துக்கு பிறகும் பணியாற்ற வேண்டியிருக்கும். குறிப்பாக மேனஜர்கள் அமெரிக்காவில் இருக்கும்போது இதுதான் நடக்கும். இந்தியாவில் உள்ள நம் ஊழியர்களின் நிலையை பற்றி அவர்கள் சற்றும் சிந்திப்பது இல்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.

‛ஃபீல்’ செய்த நெட்டிசன்கள்

இன்னொருவர் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். ‛‛ஒருவர் முடிவெட்டும் போதும் கூட பணி செய்து கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன்'' என்று வேடிக்கையாக கூறியுள்ளார். மற்றொருவரோ, ‛‛தியேட்டரில் இருந்து கொண்டு அந்த பெண் படத்தை பார்ப்பாரா? இல்லை வேலையை பார்ப்பாரா? அவருக்காக நான் ‛ஃபீல்' பண்ணுகிறேன்'' என்று வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

இன்னொரு தரப்போ, ‛‛அந்த பெண் பாவம்.. அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்து வந்த பிறகும் தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம்'' என்று கவலையை பகிர்ந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+