கர்நாடக சட்டசபை தேர்தல்: சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார்? எடியூரப்பா சூசகம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், காங்கிரசின் சித்தராமையாவிற்கு எதிராக தனது மகன் விஜேயந்திரா நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவரான எடியூரப்பா சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதி தற்போதே கவனம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி நிறைவு பெற உள்ள நிலையில், அங்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

சித்தராமையா போட்டி
மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. காங்கிரஸ் சார்பில் வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

வெற்றி எளிதாக இருக்காது
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக சித்தராமையா உள்ளார். கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் கோலார் தொகுதியில் கட்சி தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாட்டால் சித்தராமையாவின் வெற்றி எளிதாக இருக்காது என சொல்லப்பட்டது.

பாஜக வேட்பாளர் யார்
இதனால் சித்தராமையாவின் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதற்கு சித்தராமையாவும் ஒப்புக்கொண்டதாகவும் கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியானது. அதன்பிறகே வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்த தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்நது.

விஜேயந்திரா நிறுத்தப்படுகிறார்?
தற்போது வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யாதிந்த்ரா எம்.எல்.ஏவாக உள்ளார். இதனால், சித்தராமையாவை வீழ்த்த காய் நகர்த்தி வரும் பாஜக சவாலான வேட்பாளரையே நிறுத்தும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், சித்தராமையாவிற்கு எதிராக தனது மகன் விஜேயந்திரா நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவரான எடியூரப்பா சூசகமாக தெரிவித்துள்ளார். வருணா தொகுதியில் பிஒய் விஜேயந்திரா களம் இறக்கப்படுவாரா என்பது குறித்து முடிவு செய்ய உயர்மட்ட ஆலோசனைகள் நடப்பதாக எடியூரப்பா கூறினார்.

கவனம் பெறும் வருணா தொகுதி
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய எடியூரப்பா இந்த தகவலை கூறினார். வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து பாஜக சார்பில் விஜேயந்திரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தொகுதியில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிகிறது. வருணா தொகுதியில் இரு பெரும் தலைகள் மோதிக்கொள்ளும் சூழல் இருப்பதால் அந்த தொகுதி மீது இப்போதே அரசியல் நோக்கர்கள் பார்வை விழத் தொடங்கியுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications