கர்நாடகாவில் கொரோனா பரவல் மிக மோசம்.. நிலைமை கைமீறி போய்விட்டது.. எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. நிலைமை கைமீறி போய்விட்டது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸின் 2ஆவது அலை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ்
கொரோனாவிலிருந்து மீண்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

முகக் கவசம்
ஒரு வீட்டில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைதான் கொரோனாவை எதிர்க்க ஒரே தீர்வு.

கட்டுப்பாடுகள்
கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இனி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் நாம் ஏற்கெனவே எடுத்துக் கொண்டோம்.

கர்நாடகா
மாஸ்க் அணியாமல் வருவோரிடம் அபராதம் விதித்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லாதீர்கள். சமூகத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக மக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களில் கர்நாடகா 5ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications