Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ட இடத்தில் கை வைத்து முத்தம்! பெங்களூர் மெட்ரோ நிலையத்தில் அத்துமீறிய காதல் ஜோடி! பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில், பொது இடம் என்று கூட பார்க்காமல், மற்ற பயணிகள் முன்பு காதலியை கண்ட இடத்தில் தொட்டு இளைஞர் முத்தமிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையத்தில் காதல் ஜோடி அத்துமீறும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாட்டின் ஐடி தலைநகரான பெங்களூர் பரபரப்பான நகரங்களின் ஒன்றாகும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் பெங்களூர் ஒன்றாகும். போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையினை தினமும் 8 லட்சம் பயணிகள் பயன்படுத்துக்கிறார்கள்.

young-couple-misbehaved-at-bangalore-metro-station

இளம் காதல் ஜோடி

இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் உணவு சாப்பிடுவது, ரீல்ஸ் எடுப்பதற்கு தடை உள்ளது. ஆனால் சிலர் அவ்வப்போது விதிகளை மீறுகின்றனர். இந்த நிலையில் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய், பொது இடம் என்று கூட பார்க்காமல் மற்ற பயணிகள் முன்பு ஒரு காதல் ஜோடி அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருந்தது.

பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலைய பிளாட்பார்மில் இளம் காதல் ஜோடிகள் நின்று கொண்டிருந்தனர். ரயிலில் ஏறுவதற்காக பிளாட்பாரத்தில் நின்ற அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இளம்பெண்ணை அவரது காதலர் கண்ட இடத்தில் கை வைக்கிறார்.. முத்தம் கொடுக்கிறார்.. மற்ற பயணிகள் அருகில் இருக்கிறார்கள், பொது இடம் என்றெல்லாம் பாக்காமல் இளம்பெண்ணை தொட்டு முத்தமிட்டுள்ளார்.

கண்ட இடத்தில் தொட்டு அத்துமீறல்

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவானது மொத்தம் 1.30 நிமிடம் ஓடுகிறது. அதில் மெட்ரோ ரயிலில் ஏறுவதற்காக பிளாட்பாரத்தில் இளம்பெண்ணும், இளைஞரும் நிற்கின்றனர். இதில் இளம்பெண்ணுக்கு பின்னால் நின்ற இளைஞர் பெண்ணை கண்ட இடத்தில் தொட்டு அத்துமீறலில் ஈடுபடுகிறார்.

https://x.com/i/status/1910620365187146189

அந்த வீடியோ 1 நிமிடம் 30 நொடிகள் ஓடும் விதமாக உள்ளது. மெட்ரோ ரெயிலில் ஏறுவதற்காக தயாராக ஒரு இளம் காதல் ஜோடி நடைமேடையில் நிற்கிறார்கள். இளம்பெண்ணின் பின்னால் நின்றபடி வாலிபர் அத்துமீறலில் ஈடுபடுகிறார். இளம்பெண்ணும் ஏதும் சொல்லாமல் நிற்கிறார். இப்படியாக அந்த இளம் காதல் ஜோடியினர் ரயில் நிலையத்தில் கிளுகிளுப்பாக இருந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இதனை பின்னான் நின்ற சிலர் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும், முகம் சுளித்தனர். மேலும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இப்படி கிளுகிளுப்புடன் நடந்துகொண்டு காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விதிகளை மீறியதாக 27,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காதல் ஜோடி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் அந்த இளம் காதல் ஜோடிகள் யார் என்று வீடியோவை வைத்து தேடி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+