'இந்தி பேசு.. இல்லனா வேலையை விட்டு போ'.. திமிராக பேசிய மேனேஜர்.. கன்னடத்தில் மன்னிப்பு கேட்டு வீடியா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூருவில் உள்ள ஜோமோட்டா வேர்ஹவுஸில் மேனேஜர் ஒருவர், கர்நாடகா மாநில ஊழியர்களிடம் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்..அப்படி கற்க முடியாவிட்டால் வேலையை விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கன்னட ஆதரவு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கன்னட மொழியிலேயே மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெங்களூருவில் ஜோமோட்டா வேர்ஹவுஸ் நிறுவனத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக் , தனக்குக் கன்னடம் தெரியாது என்றும், தனது குழுவினரிடம் இந்தியில் மட்டுமே பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.

Zomato Manager asked apologies in Bengaluru for Telling Local Staff to Speak Hindi or Leave Job

வேலையில் தொடர விரும்பும் ஊழியர்கள் இந்தி மொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அப்படி முடியாமல் யார் வேலையை விட்டுச் சென்றாலும் தனக்குக் கவலையில்லை என்றும் அசோக் கூறியுள்ளார். தாங்கள் கர்நாடகாவில் இருப்பதாக ஒரு ஊழியர் சுட்டிக்காட்டியபோது, ​​"அதனால் என்ன? நான் இந்தியில் மட்டுமே பேசுவேன்" என்று அவர் திமிராக பதில் அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவரை வேலையிலிருந்து நீக்கவும் வலியுறுத்தி, திங்களன்று கன்னட ஆதரவு ஆர்வலர்கள் ஜோமோட்டா சேமிப்பு கிடங்கிற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் மடனாயகனஹள்ளி காவல் நிலையத்தில் மேனேஜர் அசோக்கிற்கு எதிராக முறையான புகாரும் அளிக்கப்பட்டது; அவர் மீது 'அறிவிக்கப்படாத குற்றப் பதிவு' பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் அசோக்கைச் சிறிது நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்கள். அவர் மீது எடுக்கப்பட உள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை; அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

பின்னர் அசோக் கன்னட மொழியில் மன்னிப்பு கோரி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கைகளைக் கூப்பிப் பேசிய அவர், தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்றும் உறுதியளித்திருக்கிறார். இது தொடர்பான ஜோமோட்டா நிறுவனத்திடமிருந்து எந்தவொரு பொது அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை; அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டாரா அல்லது இன்னும் பணியில் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நாடு முழுவதிலுமிருந்து ஊழியர்கள் பலர் வேலை செய்யும் பெங்களூருவில், தகவல் தொடர்பு மொழி குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் கிளறியுள்ளது. கர்நாடகாவில் மொழி என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்து வருகிறது; பொது இடங்களிலும் பணியிடங்களிலும் கன்னட மொழிக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பெங்களூரில் வலுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+