குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? பாஜக வென்றால் அவரே தான்.. சஸ்பென்ஸ் உடைத்த அமித்ஷா
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளார் அமித்ஷா.
வரும் டிசம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மும்முனைப் போட்டி
முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளிலும், 2 ஆம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளிலும் நடைபெற இருக்கிறது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்துடன் சேர்ந்த வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளாது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல்
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 167 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாஜக இதுவரை வெளியிட்டு இருக்கிறது. கடந்த கடந்த 9 ஆம் தேதி 160 வேட்பாளர்களை கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. கடந்த சனிக்கிழமை 7 வேட்பாளர்களை கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு இருக்கிறது.

பூபேந்திர பட்டேல்
இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் கட்லோதியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி மஜுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மாநில அமைச்சர்கள் ருஷிகேஷ் படேல், ஜிது வகானி, ஹர்ஷ் சங்வி, ஜகதீஷ் விஸ்வகர்மா, கானு தேசாய், கிரித்சிங் ராணா மற்றும் பூர்ணேஷ் மோடி ஆகியோர் தாங்கள் கடந்த முறை போட்டியிட்டு வென்ற தொகுதிகளிலேயே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.

புதியவர்கள்
பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 38 எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள். பாஜகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 69 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் கடந்த 10 ஆண்டுகளில் வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.

முதலமைச்சர் வேட்பாளர்
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மட்டும் கட்சியின் தேசிய இணை பொதுச்செயலாளர் இசுதீன் காத்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்தன. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அதுகுறித்து மவுனம் கலைத்து உள்ளார்.

அமித்ஷா பேச்சு
"குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் தற்போதைய முதலமைச்சர் பூபேந்திர பட்டேலே முதலமைச்சராக இருப்பார். பூபேந்திர பட்டேல் முதல்முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட தொகுதியான கட்லோடியாவில் அவர் போட்டியிடுவார்." என்றார். குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து பூபேந்திர பட்டேல் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications