பிக் பாஸ் வீட்டில் ‘பேய்’.. அப்போ "அந்த" மேட்டர்லாம் இதுக்குத்தானா?
பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக புதிய பிரச்சினையை கொளுத்திப் போட்டுள்ளார் மும்தாஜ்.
பிக் பாஸ் சீசன் 2விற்கான வீடு போன்ற அமைப்பு பூந்தமல்லி அருகே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அந்த வீட்டில் தீய சக்திகள் நெருங்காமல் இருக்க தாயத்து, தகடு போன்றவை பதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சீசன் 2 ஆரம்பித்து 30 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவ்வீட்டில் பேய் இருப்பதாக மும்தாஜ் சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேயைப் பார்த்த மும்தாஜ்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பேயை பெண்கள் அறையில் பார்த்ததாக மும்தாஜ் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் நமக்கு ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், மும்தாஜ் கூறியது குறித்து கார்டன் பகுதியில் அமர்ந்து பாலாஜியும், டேனியும் பேசிக் கொண்டிருந்தனர்.

பாலாஜியின் சந்தேகம்:
அப்போது பாலாஜி, ‘ரித்விகாவிடம் பேயை நேரில் பார்த்ததாக மும்தாஜ் கூறியிருக்கிறார். இதனால் அவர் பயந்து விட்டார்' என்றார். பின்னர் இது குறித்து தன்னிடம் பேசியதாகவும், ஆனால் இது எலிமினேசனுக்காக நடத்தப்பட்ட நாடகமா என அவர் கேள்வி எழுப்பினார்.

காட்டியிருக்கலாமே பாஸ்:
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என வீடு முழுவதும் சுமார் 60க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைத்து படமாக்கப்படும் வீட்டில் பேய் இருந்தால், அந்தக் காட்சிகளையும் நமக்கு காட்டலாமே. இதனால் டிஆர்பி இன்னும் எகிறுமே.

பயமுறுத்தும் மும்தாஜ்:
கடந்த சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் பேய் டாஸ்க் அளிக்கப்பட்டது. இம்முறையும் அதுபோல் பிக் பாஸ் டாஸ்க் எதுவும் தருவார் என எதிர்பார்த்தால், நிஜமாகவே பேய் இருக்கிறது என மும்தாஜ் பயமுறுத்தி வருகிறார்.

ரகசிய டாஸ்கா?
இதுதவிர பெண் போட்டியாளர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேய் விளையாட்டு விளையாடியுள்ளனர். அப்போது விளையாட்டிற்காக மும்தாஜ் பேயைப் பார்த்ததாகச் சொன்னாரா, இல்லை அவர் ரகசிய டாஸ்க் எதுவும் நடத்தி வருகிறாரா என்பது தெரியவில்லை.

முக்கிய காட்சிகள் மிஸ்ஸிங் :
இப்படியாக பார்வையாளர்களைக் குழப்புவதாலேயே போன சீசனை விட, இந்த சீசன் மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது போட்டியாளர்கள் பேச்சு மூலமே தெரியவருகிறது. அது தொடர்பான காட்சிகளையும் மக்களுக்கு காண்பித்தால், இன்னும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடலாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications