கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வால் பிக்சட் டெபாசிட் மீதும் கடன் வாங்கும் மக்கள்!
டெல்லி: இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பருப்பில் இருந்து, குழம்பில் போடும் வெங்காயம் வரை விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது. உயர்ந்துள்ள விலைவாசியால் மக்கள் பிக்சட் டெபாசிட் என்னும் நிரந்தர வைப்புத் தொகையின் மீதும் கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அது ஒருபுறமிருக்க விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் தீபாவளி போன்ற விழாக்காலங்களின் அதிகரிப்பும் மக்களை பிக்சட் டெபாசிட் என்னும் நிரந்தர வைப்புத் தொகையின் மீது கடன் வாங்கும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வருகிறது.

கடந்த செப்டம்பரில் இருந்து பிக்சட் டெபாசிட் மீதான கடன்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
பீதி கிளப்பும் பிக்சட் டெபாசிட் கடன்கள்:
இந்த நிரந்தர வைப்புத் தொகை மீதான லோன்கள் மொத்த பிக்சட் டெபாசிட்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனவாம். எனினும், வாகன கடன் மிகவும் குறைந்துள்ளதாம்.
என்ன செய்ய விலைவாசி அப்படி:
இதுகுறித்து கனரா வங்கியின் அதிகாரி ஒருவர், "குறைந்த கால தேவைகளுக்கு டெபாசிட்டுகளை உடைக்க பயனாளர்கள் பெரும்பாலும் முன் வருவதில்லை. எனினும், உயர்ந்து வருகின்ற விலைவாசியால் இது போன்ற பிக்சட் டெபாசிட் மீதான விழாக்கால கடன்கள் அதிகரித்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
கன்னா பின்னா கிரெடிட் கார்டு கடன்கள்:
கிரெடிட் கார்டுகள் மீதான கடன்களும் 22 சதவீதமளவிக்கு அதிகரித்துள்ளனவாம். வீட்டுக் கடன்களும் 18 சதவீதமளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், விலைவாசி உயர்வால் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, பிக்சட் டெபாசிட் கடன்கள்தான் அதிகம் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கையில் நிற்காத சம்பளம்:
வரவுக்கு மிஞ்சிய செலவு நிலையே இந்த விலைவாசி உயர்வினால் நிலவி வருகின்றது. வாங்கும் சம்பளம் கையில் 10 நாட்கள் கூட நிற்பதில்லை என்னும் புலம்பல்தான் நடுத்தர வர்க்க மக்களிடையே அதிகமாக கேட்டு வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
கழுத்தை நெரிக்கும் விலைவாசி:
கைக்கெட்டா தூரத்தில் சாப்பிடும் பொருட்களின் விலைகளே உயர்ந்து நிற்கும் போது, கழுத்தை நெரிக்கும் கடன்களால் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பண்டிகைகளும் காற்றோடு கலந்து காணமலே போய் விடுகின்றன. தற்போது, எதிர்கால சேமிப்பிலும் கைவைக்கும் அளவிற்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது விலைவாசி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications