டிசிஎஸ், இன்போசிஸ் கதை முடிந்தது..? ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக்-ன் ஷாக் அறிவிப்பு.. ஐடி ஊழியர்களே உஷார்!

Subscribe to Oneindia Tamil

செயற்கை நுண்ணறிவு (AI) போர் இப்போது புதிய கட்டத்துக்கு சென்றுள்ளது. இதுவரை ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக் போன்ற நிறுவனங்கள் ChatGPT, Claude போன்ற AI மாடல்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தின. ஆனால் தற்போது நிறுவனங்களுக்கான AI அடிப்படையிலான ஐடி சேவைகள் வழங்கும் திட்டத்தில் நுழைந்துள்ளன.

ஐடி சேவை பிரிவில், காலம் காலமாக இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், காக்னிசென்ட், ஐரோப்பிய நிறுவனங்களான ஆக்சென்சர் மற்றும் கேப்ஜெமினி ஆகியவை மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிறுவனங்களுக்கு ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக் தற்போது வில்லனாக மாறியுள்ளது.

IT Tcs infosys AI OpenAI The Deployment Company Anthropic enterprise AI services OpenAI vs TCS Infosys Indian IT AI disruption enterprise AI integration AI workflow automation custom AI deployment AI engineering support AI powered business transformation autonomous AI agents for operations OpenAI IT services Anthropic direct AI deployment threat to Indian IT outsourcing generative AI enterprise services AI agents replacing IT manpower

இதுவரையில் ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக் ஏஐ மாடல்களை உருவாக்கின. இந்திய ஐடி நிறுவனங்கள் அந்த ஏஐ மாடலை வைத்து நிறுவனங்களுக்கு தேவையான ஏஐ அடிப்படையிலான ஐடி சேவைகளை செயல்படுத்தி கொடுத்தன. இந்த கட்டமைப்பை உடைத்து ஏஐ நிறுவனங்களே நேரடியாக ஐடி சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக் வெறும் ஏஐ கருவிகளை விற்பதோடு நில்லாமல், கன்சல்டிங், ஆப்ரேஷன்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் எண்டர்பிரைஸ் டிரான்ஸ்பார்மேஷன் வரை சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் கோடிகணக்கான வருவையை தட்டிபறிக்க உள்ளது.

தனிப் பிரிவு

முதல் கட்டமாக ஓப்பன்ஏஐ, ஆன்ரோபிக் ஏஐ சேவைக்காக தனிப் பிரிவை உருவாக்க உள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்கு நேரடியாக பிற ஏஐ சேவைகளை பயன்படுத்தும் கட்டமைப்பை உருவாக்கும் முறையை கொண்டு வர உள்ளது. இதன் வாயிலாக

ஏஐ வொர்க்ப்ளோ ஆட்டோமேஷன்
எண்டர்பிரைஸ் ஏஐ இண்டிகிரேஷன்
கஸ்டம் ஏஐ டிப்ளாய்மென்ட்
ஏஐ இன்ஜினியரிங் சப்போர்ட்
ஏஐ பவர்ட் பிஸ்ன்ஸ் டிரான்ஸ்பார்மேஷன்
ஆட்டானமஸ் ஏஐ ஏஜென்ட்ஸ் ஃபார் ஆப்ரேஷன்ஸ்

போன்ற சேவைகளை உலகளவிய நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் துறை வாரியாக, பிரிவு வாரியாக அளித்து வந்த டெக் சேவையை 5-6 பிரிவுக்குள் அடக்கி என்ட் டூ என்ட் சேவையாக அளிக்க முடிவு செய்துள்ளது.

தனி நிறுவனம்

இதற்காக ஓப்பன் ஏஐ நிறுவனம் The Deployment Company என்ற பெயரில் ஒரு சிறப்பு நிறுவனத்தை உருவாகியுள்ளது, இந்த நிறுவனத்தின் வாயிலாக நிறுவனங்களுக்கான பிரத்தியேக சேவைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது.

ஆன்ரோபிக் நிறுவனமும் இதேபோன்ற நிறுவன சேவைகளை விரிவுபடுத்த தனி நிறுவனத்தை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனங்கள் வெறும் AI மென்பொருள் வழங்குவது மட்டுமல்லாமல், அனுபவமுள்ள பொறியாளர்கள் மற்றும் ஆலோசகர்களையும் நேரடியாக களமிறக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக AI சேவை நிறுவனங்களை வாங்கும் முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வர்த்தக மாடல் உடைந்தது

பொதுவாக ஐடி சேவை நிறுவனங்கள் "மனிதவள அடிப்படையிலான சேவை" மாடலில் இயங்குகிறது. ஒரு திட்டத்தை வேகமாக முடிக்க அதிகமான சாப்ட்வேர் இன்ஜினியர்கள், நீண்ட வேலை நேரம், பெரிய திட்டங்கள், மணிநேர அடிப்படையில் வருமானம் அதாவது "பில்லபிள் அவர்ஸ்" முறையில் இயங்கி வந்தது.

ஆனால் AI ஏஜெண்ட்கள் இப்போது அதே வேலையை சில விநாடிகளில் செய்து முடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பெரிய பணியாளர் குழுக்களுக்கு நிறுவனங்கள் இனி அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் மென்பொருள் பராமரிப்பு, BPO, IT சப்போர்ட், கண்சல்டிங் சேவைகள் உள்ளிட்ட பாரம்பரிய வருவாய் மாடல்களுக்கு இது நேரடியாக பாதிக்க உள்ளது.

இவை அனைத்தும் ஏற்கனவே ஏஐ மாடல்கள் அறிமுகத்தால் தவித்து வந்த நிலையில் தற்போது இவை நேரடியாக இறங்கியுள்ளதால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.

2000-களில் அவுட்சோர்சிங் புரட்சி இந்தியாவை உலக IT மையமாக மாற்றியது. இப்போது AI புரட்சி அதைவிட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டத்தில் உள்ளது. இந்த மாற்றம் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு வாழ்வா சாவா என்ப போராட்ட கட்டத்தில் வைத்துள்ளது என்பது தான் தற்போதை வருத்தமான விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+