ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா ப்ரீ.., ப்ரீ.., ப்ரீ!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால், 1 GB இலவச 4G டேட்டாவை அந்த நிறுவனம் இலவசமாக தருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி.
நாடு முழுக்கவே இந்த ஆஃபர் செயல்முறைக்கு வந்துள்ளதால் அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நண்பர்கள் பலரும் டேட்டா கிடைத்த தகவல் வந்ததும், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

3ஜி டேட்டா கொண்ட செல்போன்களுக்கு இந்த ஆஃபர் இல்லை. எனவே கால் செய்து ஏமாற வேண்டாம் என்றும், அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.
4ஜி வேகத்திற்கு வாடிக்கையாளர்களை பழக்கிவிட்டால் பின்னர், 4ஜியை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற தொழில் தந்திரமும் இதில் இருக்கலாம் என்கிறார்கள் செல்போன் சந்தையை ஆய்வு செய்யும் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications