"ரூ.12,500" தங்கம் விலையில் ஏற்பட போகும் இமாலய மாற்றம்! ஆனால்.. பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில், இது எப்போது தான் குறையும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை சரிவு தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் தங்கம் விலை எவ்வளவு சரிய வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலிக்கிறது. நேற்றைய தினம் தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை கணிசமாக ஓரளவுக்குக் குறைந்திருந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரண்டு முறை குறைந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமிற்கு ரூ. 950 குறைந்து 15,850க்கு விற்பனையானது.

ஆனந்த் சீனிவாசன்
இந்தளவுக்கு உச்சத்தில் இருப்பதால் தங்கம் விலை எப்போது சரியும்.. எவ்வளவு சரியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை சரிவு தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இப்போது ஒரே கொண்டாட்டம் தான்.. எனது வாழ்க்கையில் பார்க்கவே முடியாது என்ற விஷயம் நடந்துவிட்டது. 24 காரட் தங்கம் ரூ.19,000த்தை தட்டியிருந்தது. சர்வதேச சந்தையில் 5600 டாலர் வரை போய் இருந்தது. 24 காரட் தங்கம் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் ரூ.20,000 தாண்டிவிட்டது. 22 காரட் தங்கமும் கூட உச்சத்தில் இருக்கிறது.
எப்போது?
வரும் பிப்ரவரி 6 அல்லது 7ம் தேதி சர்வதேச சந்தையான காமக்ஸில் இன்டெக்ஸ் ரீபேலன்ஸ் செய்வார்கள். அதாவது பியூச்சர்ஸ் குளோஸ் செய்து, அடுத்த ரவுண்டு எடுப்பார்கள். அப்போது தங்கம் விலை ஓரளவுக்குக் குறையும். ஆனால், அதற்குள் டிரம்ப் ஈரான் மீது 2 குண்டைப் போட்டால் விலை 6000 டாலரை கூட தாண்டிவிடும். போர் வெடித்தால் தங்கம் விலை உச்சத்தைத் தொடும்.
சந்தோஷம் & வருத்தம்!
என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. சந்தோஷப்பட வேண்டுமா.. வருத்தப்பட வேண்டுமா என்றே தெரியவில்லை. என்னைப் பாலோ செய்வோர் தங்கம் வாங்கி இருப்பார்கள். ஆனால் இனிமேல் மக்களால் நான் சொன்னது போல 200 கிராம் அவ்வளவு ஏன் 100 கிராம் தங்கம் கூட இந்த ரேட்டில் வாங்குவது கடினம் என்பது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. உலக நாடுகளின் கரன்சிக்களை (டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை) யாருமே மதிக்கவில்லை. இத்தனை காலமாக இஷ்டத்திற்கு நோட்டை அடித்துத் தள்ளியதே தங்கம் விலை உச்சம் போகக் காரணம்..
உண்மையில் தங்கம் விலை இவ்வளவு சீக்கிரம் உயரும் என நானே நினைக்கவில்லை. முதலில் எனது வாழ்க்கையில் கிராமுக்கு ரூ.10,000 என்பதைப் பார்ப்பேன் என நினைத்தேன். பிறகு எனது வாழ்நாளில் ₹20,000 பார்ப்பேன் என நினைத்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரம் அந்தளவுக்கு உயரும் என நான் நினைக்கவில்லை. இது எங்குப் போய் முடியும் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
எவ்வளவு சரியும்
இந்தளவுக்கு விலை போய்விட்டதால் சந்தையில் தங்கத்தின் மூவ்மெண்ட்டே ரொம்ப கம்மியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மொத்த விற்பனையில் தங்கம் விலை மொத்தமாக நின்றுவிட்டதா சொல்கிறார்கள். குறையுமா எனக் கேட்டால் அவர்கள் அனுபவத்தில் சில விஷயங்களைச் சொல்கிறார்கள். கடந்த காலச் சரிவை வைத்துப் பார்த்தால் ரூ.14,000 வரை வரலாம் என்கிறார்கள். அதாவது 24 காரட் ரூ.14000க்கு வரலாம் என்கிறார்கள்..
ஆனால்..!
அப்படி என்றால் 22 காரட் தங்கம் ரூ.13000க்கு வரலாம். ஆனால், ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்.. இது குறையும் என்று நிச்சயமே கிடையாது. ஆனால் குறைந்தால் இந்தளவுக்குக் குறையும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ரூ.12,500 வரை போகலாம். அந்த விலைக்குப் போனால் கண்ணை மூடிக்கொண்டு முடிவெடுத்துவிடலாம். ஆனால், மீண்டும் சொல்கிறேன் உறுதியாகக் குறையும் எனச் சொல்லவே முடியாது. குறையாமலேயே கூட போய்விடலாம்" என்றார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. நிச்சயம் இதை பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் நிதி ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்!












Click it and Unblock the Notifications