வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் “ஆப்பிள்” நிறுவனம்
வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது.
ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "ஆப் ஸ்டோரில்" இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.
இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

பெற்றோர் புகார்:
அந்தப் புகாரில் குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை திருப்பித் தர நிறுவனம் ஒப்புக்கொண்டது.

வரம்பில்லா சேவை:
இந்த மொபைல் போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பதிவு செய்தபின் 15 நிமிடங்களுக்கு யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த சமயத்தில் குழந்தைகள் வரம்பின்றி தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை வாங்க முடியும்.இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தெரிவிக்கவில்லை.

1 லட்ச ரூபாய் அப்ளிகேஷன்:
இந்த மொபைல் போனை பயன்படுத்தும் குழந்தைகள் "கிட்ஸ்" ஸ்டோரில் இருந்து 30 ஆயிரம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையுள்ள அப்ளிகேஷன்களை வாங்கியுள்ளனர். மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ள ஒரு பெண்மணி அவரது மகள் வாங்கிய விளையாட்டு அப்ளிகேஷனுக்காக 1.60 லட்சம் ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ளார்.

திருப்பி அளிக்கும் ஆப்பிள்:
"கடந்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப் ஸ்டோருக்காக ஏறக்குறைய மூன்று கோடி வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மற்றும் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்" என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி டிம் குக் தெரிவித்து உள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications