Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் முதலீடு.. டிஜிட்டல் தங்கம் vs உண்மையான தங்கம்.. இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் பணமழை தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை இன்று (அக்டேபார் 14) 22 காரட் மதிப்புள்ள ஒரு சவரன் தங்கம், 94,600 ரூபாய் ஆக உள்ளது . 24 காரட் தூய தங்கம் ஒரு சவரன் 1,03,200 ஆக இருக்கிறது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் 12,900 ரூபாய் ஆக இருக்கிறது. தொடர்ந்து 8வது வாரமாக ஏற்றத்துடன் இருக்கிறது தங்கம் விலை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் இந்தத் தொடர்ச்சியான மற்றும் திடீர் விலை உயர்வு, தங்கம் வாங்க ஆசைப்பட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தை பொறுத்தவரை முதலீடாக கருதுவோர், டிஜிட்டல் தங்கம் வாங்கலாமா அல்லது நகையை கடைகளில் போய் வாங்கலாமா என்பதை பார்ப்போம்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கிறது. வரும் திங்கள்கிழமை தீபாவளி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முன்பாக தங்கம் வாங்குவதை பலரும் விரும்புவார்கள். போனஸ், சேமிப்பு, தங்க நகை சேமிப்பு திட்டங்கள் மூலம் தங்கம் வாங்க சுபமான நேரமாக கருதுவது தீபாவளி பண்டிகையைத்தான். ஆனால் இந்த ஆண்டு தங்கம் 50%-க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் மதிப்புள்ள ஒரு சவரன் தங்கம், 94,600 ரூபாய் ஆக உள்ளது . 24 காரட் தூய தங்கம் ஒரு சவரன் 1,03,200 ஆக இருக்கிறது.

Are you going to a jewelry shop for Diwali Digital gold vs real gold What s The Better Investment

தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டுமே மிகப்பெரிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தங்கத்தை உலக நாடுகள் வாங்கி குவிப்பது, பல்வேறு உலக நாடுகளில் நிச்சயமற்ற அரசியல் சூழல், சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் வர்த்தக போர், ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணங்களால் 2025-ஆம் ஆண்டில் தங்கம் கிட்டத்தட்ட 53% உயர்ந்துள்ளது.

உலக அளவில் பொருளாதாரம் பல நாடுகளில் பலவீனமாக இருப்பதால், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதுவே தங்கம் உயர முக்கிய காரணமாக உள்ளது. அத்துடன் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த புதிய எதிர்பார்ப்புகள், வரிக் கட்டணம் தொடர்பான கவலைகள் போன்றவையும் முதலீட்டாளர்களைத் தங்கத்தின் பக்கம் தள்ளியிருக்கிறது.

இத்தகைய சூழலில், குறுகிய காலத்தில் தங்கம் வாங்கத் திட்டமிடும் நுகர்வோர், தங்கள் தேவை, பட்ஜெட் மற்றும் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்து டிஜிட்டல் தங்கம் அல்லது உண்மையான தங்கம் (கடைகளில் நகை அல்லது காயினாக வாங்குவது) ஆகிய இரண்டில் ஒன்றை வாங்கலாம். இரண்டிலுமே நன்மைகள் உள்ளது. நகைக்கடைகளில் சென்று உண்மையான தங்கம் வாங்குவது என்பது ஒரு சொத்து போல் வீட்டில் இருக்கும். நகைகளாக அணிந்து கொள்ளலாம். வேண்டும் நேரத்தில் அடகு வைக்கலாம். திருமண விசேஷங்களில் அணிந்து கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில், டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை இந்த வசதிகள் இருக்காது. அதனை முதலீடாக மட்டுமே பார்க்க முடியும்.

டிஜிட்டல் தங்கம்: கோல்ட் ETF-களில் பணம் போடலாமா

டிஜிட்டல் தங்கம் என்பது நீங்கள் ஆன்லைனில் தங்கத்தை வாங்க, விற்க மற்றும் சேமிக்க அனுமதிக்கும் ஒரு எளிய முறை தான். உடனடி லாபம் அல்லது குறுகிய கால நிதித் தேவைக்காக தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் உண்மையான (Physical) தங்கத்தை (நகை, நாணயம்) தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, டிஜிட்டலில் தங்கம் வாங்கலாம். மொபைல் வாலெட்டுகள், வங்கி செயலிகள் அல்லது நகைக்கடை இணையதளங்கள் மூலம் 24 காரட் தங்கத்தை ஆன்லைனில் வாங்கலாம். குறைந்தபட்சம் ₹1-க்கும் வாங்கலாம், செய் கூலி, சேதாரம் இல்லை. சேமிப்புக் கட்டணங்கள் இல்லை. எளிதில் வாங்கலாம், விற்கலாம் (உடனடி பணப்புழக்கம்).வாங்கும் போதும் விற்கும் போதும் 3% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். அதேநேரம் சில நிறுவனங்கள் 2 கிலோ வரை மட்டுமே டிஜிட்டலில் வாங்க அனுமதிக்கின்றன.

இது எளிதான பணப்புழக்கத்திற்கு உதவுகிறது. இதனை எந்த நேரத்திலும் விற்கலாம். இதனை பாதுகாக்க பீரோ எல்லாம் தேவையில்லை.. திருட்டு மற்றும் பராமரிப்பு தொடர்பான கவலைகள் கிடையாது. இந்தத் திட்டத்தில், வாங்குபவருக்கு 24 காரட் சுத்தமான தங்கத்தின் மதிப்பில் டிஜிட்டல் தங்கம் வாங்க அனுமதிப்பார்கள். 12 மாதங்கள் வைத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் வாங்கிய 12 மாதங்களுக்குள் விற்கப்படும் டிஜிட்டல் தங்கம் குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதப்படும். அதேபோல் வருமான வரி அடுக்கு விகிதங்களில் வரி விதிக்கப்படும். 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கத்திற்கு, ஆதாயங்கள் மீது 12.5% வரி விதிக்கப்படும்.

உண்மையான தங்கம்: எவ்வளவு பாதுகாப்பானது?

உண்மையான தங்கம் என்பது முதலீடு செய்ய விரும்பும் பலரும் வாங்கும் விருப்பமாக உள்ளது. அதனை உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் மற்றும் நகைகளாக கடைகளில் வாங்கலாம். திருமணங்கள், நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பில் நகைகள் உங்களுக்கு பெரிய கலாச்சார அடையாளமாக இருக்கும். அத்துடன் உண்மையான தங்கத்தை வீட்டிலோ அல்லது வங்கி லாக்கர்களிலோ சேமிக்கலாம். இந்த தங்கத்தை வாங்கும் போதும், 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. நீங்கள் நகை வாங்கினால், செய் கூலி கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும், இது பொதுவாக 10% முதல் 20% வரை இருக்கும். இந்தக் கூடுதல் செலவுகள் உண்மையான தங்கத்தை டிஜிட்டல் தங்கத்தை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளும். அதாவது தங்க நகைகளை வாங்கும்போது, ஒருவர் பொதுவாக தங்கத்தின் மதிப்பை விட அதிக தொகையை செலுத்த வேண்டும். எனவே, குறுகிய கால முதலீட்டிற்கு தங்க நகைகளை வாங்குவது சிறந்தது அல்ல.


தங்கத்தை நீண்ட காலத்திற்கு (3 முதல் 8 வருடங்கள் அல்லது அதற்கு மேல்) முதலீடு செய்து, அதிக லாபம் மற்றும் வரிச் சலுகைகளைப் பெற விரும்பினால் என்ன செய்யலாம்:

சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் ( SGB) இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் அரசுப் பத்திரங்கள். இவை தங்கத்தின் மதிப்பில் அச்சிடப்பட்டு வழங்கப்படும். முதிர்வின் போது (8 ஆண்டுகள்) கிடைக்கும் மொத்த லாபத்திற்கும் மூலதன ஆதாய வரி இல்லை. ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி வழங்கப்படும். முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறலாம்).

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Gold Mutual Funds) கோல்ட் ETF-களில் முதலீடு செய்யும் திட்டங்கள் இருக்கின்றன. டீமேட் கணக்கு தேவையில்லை. எஸ்.ஐ.பி (SIP) முறையில் முதலீடு செய்யலாம். மற்ற ஃபண்டுகளைப் போலவே, நிர்வாகக் கட்டணம் உண்டு. கோல்ட் ETF-களை விட வருமானம் சற்றுக் குறைவாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+