For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.பி.ஐயின் அடுத்த தலைவராகிறார் அருந்ததி பட்டாச்சார்யா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Arundhati Bhattacharya front runner for post of SBI chief
டெல்லி: எஸ்.பி.ஐ வங்கியின் அடுத்த தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ தலைவராக உள்ள பிரதீப் சவுத்ரியின் பணி காலம் இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா இருக்கலாம் என்று எஸ்.பி.ஐ-யின் நிர்வாக இயக்குனர் குழு கூறியுள்ளது.

இவர் நியமிக்கப்பட்டால், முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்வு செய்யும் கமிட்டியில், முதன்மையாக அருந்ததி பட்டாச்சார்யாவுக்கே வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் பணி நியமனம் செய்யும் குழுவிற்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருந்ததி பட்டாச்சார்யா இதற்கு முன்னர் எஸ்.பி.ஐ கேப்பிட்டலில் மற்றும் எஸ்.பி.ஐ முதலீட்டு பிரிவில் 36 வருடம் தலைமை நிர்வாக இயக்குனராக அனுபவம் உள்ளாவராவார்.

English summary
Arundhati Bhattacharya is believed to be the front-runner for the post of chairperson of country's largest lender State Bank of India (SBI), sources said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X