22K தங்கம் என சொல்லி 18K தங்கம் விற்பனை.. பொதுமக்களை அதிரவைக்கும் புதிய மோசடி! பகீர் தகவல்
சென்னை: தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் இந்த வேளையில், நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை முதலீடு செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஹால்மார்க் முத்திரையைத் தான் இவ்வளவு நாள் நாம் நம்பிக் கொண்டு இருந்தோம். ஆனால், அதிலும் மோசடி நடக்கிறதாம்.. இந்த புதுவித தங்க மோசடியில் இருந்து நாம் எப்படித் தப்பிக்கலாம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய சேமிப்பு. ஏழை முதல் நடுத்தர குடும்பம் வரை அனைவருமே தங்கத்தைத் தான் நமது நாட்டில் பிரதான சேமிப்பாகக் கருதி முதலீடு செய்வார்கள். தங்கம் இருந்தால் எந்தவொரு சிக்கலிலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்!

போலி ஹால்மார்க்
ஆனால், உங்களின் இந்த நம்பிக்கையைச் சாதகமாக்கிக் கொண்டு சில மோசடிப் பேர்வழிகள் போலி ஹால்மார்க் முத்திரைகள் மூலம் உங்களை ஏமாற்றக்கூடும். இவ்வளவு காலம் ஹால்மார்க் முத்திரை இருந்தாலே அது சுத்தமான தங்கம் என்று நாம் நம்பினோம். உண்மையில் தூய தங்கத்திற்குத் தான் மத்திய அரசு ஹால்மார்க் கொடுக்கும். ஆனால், மோசடி பேர்வழிகள் இதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
செக் செய்வது எப்படி
அதாவது 18K அல்லது 14K தங்கத்தில் போலியாக ஹால்மார்க் முத்திரையைப் பதித்து, அதை 22K தங்கம் என அதிக விலைக்கு விற்கிறார்கள். வெறும் கண்களால் இதைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்பதால், வாடிக்கையாளர்கள் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். பெரிய பெரிய கடை என்றால் பிரச்சினை இல்லை. ஆனால், இரண்டாம் கட்ட நகரங்கள் சிறு கிராமங்களில் போலி ஹால்மார்க் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. வாடிக்கையாளர்கள் தூய்மையான தங்கம் என நினைத்து போலி ஹால்மார்க் தங்கத்தை வாங்கி ஏமாறிவிடுகிறார்கள்.
HUID கோடு
தற்போது இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு ஹால்மார்க் தங்க நகையிலும் 6 இலக்கங்கள் கொண்ட HUID கோடு பொறிக்கப்பட்டிருக்கும். இதைச் சமீபத்தில் தான் மத்திய அரசு கட்டாயமாக்கியது. எனவே, ஹால்மார்க் இருந்தாலும் அத்தோடு இந்த HUID ஐடியையும் சேர்த்துப் பாருங்கள். இந்த HUID ஐடியை வைத்தே அது போலி தங்கமா இல்லை உண்மையான தங்கமா என்பதை நாம் ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் வாங்கும் நகையில் இருக்கும் 6 இலக்க HUID கோடைத் தெளிவாகக் குறித்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் செல்போனில் BIS Care Appஐ டவுன்லோடு செய்து, அதில் 'Verify HUID' என்ற பகுதிக்குச் சென்று இந்த 6 இலக்க நம்பரை பதிவிடவும்.. நகை உண்மையானது என்றால், அந்த நகையின் தரம், தயாரிப்பாளர் விவரம் மற்றும் சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும். விவரங்கள் வரவில்லை என்றால், அது போலி என்பது உறுதி.
கவனம்
புதிய நகைகள் வாங்கும் போது மட்டுமல்ல, ஏற்கனவே உங்கள் வீட்டில் இருக்கும் ஹால்மார்க் நகைகளையும் இந்த முறையில் நீங்கள் சரிபார்க்கலாம். ஒரு சிறிய அலட்சியம் உங்கள் முதலீட்டிற்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். 22K தங்கத்திற்குப் பணம் செலுத்திவிட்டு, பிற்காலத்தில் அது 18K எனத் தெரியவந்தால் ஏற்படும் இழப்பு ஈடு செய்ய முடியாதது. விழிப்புணர்வு ஒன்றே உங்களை இத்தகைய இழப்புகளில் இருந்து பாதுகாக்கும். நகை வாங்கும் போது மறக்காமல் HUID கோடைச் சரிபார்க்கத் தவறாதீர்கள்!
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications